உலகம்
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இளம் மருத்துவர் திடீர் உயிரிழப்பு : ஸ்டெராய்டு தான் காரணமா ?
அண்மைக் காலமாக இளைஞர் பலரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து வரும் செய்தி அதிகரித்து காணப்படுகிறது. உலகம் முழுவதும் நடைபெறும் இந்த நிகழ்வு, இந்தியாவிலும் நிகழ்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட, கல்லூரி விழாவில் நடனமாடிய இளைஞர், ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்ட இளைஞர், திருமண விழாவில் நடனமாடிய சிறுவர்கள் என பலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து வரும் செய்திகள் அதிகரித்து காணப்படுகிறது.
அந்த வகையில் தற்போது பிரேசிலில் பிரபல மருத்துவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் அதிக அளவில் ஸ்டெராய்டு எடுத்துக்கொண்டது விசாரணையில் தெரியவந்து, அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ என்ற நகர் உள்ளது. இங்கு பிரபல மருத்துவராக அறியப்படுபவர் தான் ரொடால்ப் துவார்த் ரிபெய்ரோ டாஸ் சான்டோஸ் (Rodolfo Duarte Ribeiro dos Santos). 33 வயது இளம் மருத்துவரான இவர், ஜிம் பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். இவர் அடிக்கடி தான் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம், வீடியோ உள்ளிட்டவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருவார்.
மேலும் மருத்துவரும், தான் திருமணம் செய்யப்போகும் பெண்ணுமான Ms Sanches என்பவருடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு வருவார். அதோடு இவரிடம் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இவர் மருத்துவம் மட்டுமின்றி இதுபோல் உடற்பயிற்சி உள்ளிட்டவையும் கற்று கொடுத்து வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், ரொடால்ப் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு கல்லீரல் பிரச்னை இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சம்பவத்தன்று திடீரென உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து மருத்துவர் ரோடால்ப் அடிக்கடி ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொண்டதால் தான் உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், அந்த செய்தியை மருத்துவ நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் அவருக்கு கல்லீரலில் உள்ள அடினோமா என்று சொல்லப்படும் கேன்சர் அல்லாத கட்டியால் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்ப்பட்டு உயிரிழந்ததாக மருத்துவ நிர்வாக விளக்கம் அளித்துள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு இளம் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பிரேசில் நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இலக்கிய மாமணி விருதுகள் 2024 : 3 தமிழறிஞர்களுக்கு வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.20.89 கோடியில் 4 முடிவுற்ற பணிகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இவைதான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மோடி செய்யும் தாக்குதல்கள்..” - பட்டியலிட்டு முரசொலி காட்டம்!
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!