உலகம்
சூடானில் 6 மாதமாகியும் முடியாத மோதல் - ராணுவ படைகளுக்கு இடையே நடைபெற்ற போரில் இரு நாளில் 800 பேர் பலி !
சூடானில் 2021-ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பின்னர் சூடானை ராணுவ ஆட்சியாளர் அப்துல் பத்தாஹ் அல் புர்ஹான் ஆண்டு வருகிறார், சூடானின் ராணுவம் முழுக்க முழுக்க இவரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
சூடானில் உள்ள சுரங்கங்களை பாதுகாப்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் துணை ராணுவ படையை (RSF) அன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்கினார். அதன் தளபதியாக முகமது ஹம்தன் டாக்லோ இருந்து வருகிறார். ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டுவந்துள்ளது.
இதன் காரணமாக விரைவில் துணை ராணுவ படையை கலைத்து அதனை ராணுவத்தில் இணைக்க ராணுவ ஆட்சியாளர் அப்துல் பத்தாஹ் அல் புர்ஹான் திட்டமிட்டிருந்தார். ஆனால் இதனை துணை ராணுவ படையின் தளபதி முகமது ஹம்தன் டாக்லோ கடுமையான எதிர்த்து வந்துள்ளார். இதன் காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் திடீரென துணை ராணுவ படையினர் நாடு முழுவதும் பரவி ராணுவத்தினர் மேல் தாக்குதலைத் தொடங்கியதால் இரு தரப்புக்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடங்கியது.
இந்த மோதல் தொடங்கி 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா மேற்கொண்ட நடவடிக்கைகள் எந்த பலனையும் தரவில்லை. இந்த போரில் சுமார் 9 ஆயிரம் நபர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், RSF படைகள் சூடானின் முக்கிய பகுதியான டார்பூரை கைப்பற்றியதாகவும்,இரு நாட்கள் நடைபெற்ற இந்த மோதலில் 800 பேர் கொல்லப்பட்டுள்தாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது. மேலும், டார்பூரை மீட்க சூடானின் ராணுவம் முயன்றுவரும் நிலையில், அங்கு உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
Also Read
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!