உலகம்
5 மடங்கு நஷ்டம் : ஒரே ஆண்டில் பாதாளத்துக்குச் சென்ற X தளத்தின் மதிப்பு - எலான் மஸ்க்தான் காரணமா ?
உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இதனிடையே ட்விட்டரை கைப்பற்றிய கையோடு இனி ட்விட்டரில் 'ப்ளூடிக்' பெற மாதம் இந்திய மதிப்பில் ரூ.719 சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்தார். இதுதவிர ப்ளூடிக் முறையிலும் எலான் மஸ்க் மாற்றத்தை கொண்டுவந்தார். அதன்படி தனிநபர், தனியார் அமைப்புகளுக்கு ப்ளூ டிக், அரசியல் பிரமுகர்கள், அரசு சார்ந்த அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக், தொழில் சார்ந்த நிறுவனங்களின் கணக்குகளுக்கு மஞ்சள் டிக் என அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதன் பின்னர் தற்போது மற்றொரு மாற்றமாக ட்விட்டரில் இனி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று எலான் மஸ்க் அறிவித்தார். இதற்கு மேலாக ட்விட்டர் நிறுவனத்தின் பெயரையே 'X' என மாற்றி அதிரடி காட்டினார்.
எலான் மஸ்க்கின் இதுபோன்ற நடவடிக்கைகளால் ட்விட்டர் 'X' தளத்தின் மதிப்பு குறைந்துகொண்டே வந்ததாகவும், அதன் விளம்பரதாரர்களின் முதலீடு பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது 'X' தளத்தின் சந்தை மதிப்பு பாதிக்கு மேல் குறைந்துவிட்டதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் வாங்கினார். ஆனால் தற்போது அதன் மதிப்பு 5 மடங்கு குறைந்து 19 பில்லியன்அமெரிக்க டாலர்கள் அளவே இருப்பதாகவும், இதன் மூலம் எலான் மஸ்க் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளார் என்றும் ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !