உலகம்
தாக்கப்பட்ட விமானப் படை பயிற்சி மையம் : 17 வீரர்கள் பலி, 3 விமானங்கள் சேதம் - பாகிஸ்தானில் அதிர்ச்சி !
ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த அரசை வீழ்த்தி தற்போது அங்கு தாலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தாலிபான் ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் பெண்களுக்கு உண்டான உரிமைகளும் பறிக்கப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.
அதோடு அங்கு தாலிபனுக்கு எதிரான அமைப்புகள் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருவதால் அங்கு தொடர்ந்து பதற்ற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே எல்லை பிரச்னைகள், பயங்கரவாதம் தொடர்பாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வர உதவினாலும் தற்போது எதிர்தரப்புக்கு பாகிஸ்தான் உதவுவதாக தாலிபான் தலைவர்கள் கருதி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு பின்னர் பாகிஸ்தான் இருப்பதாக தாலிபான் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று (சனிக்கிழமை) பாகிஸ்தானில் உள்ள மியான்வாலி விமானப் படை பயிற்சி மையத்தில் 9 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதில் அங்கிருந்த 17 வீரா்கள் மரணமடைந்த நிலையில், 3 விமானங்களை பயங்கரவாதிகள் சேதப்படுத்தினர் .அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 9 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் சேதமான விமானங்கள் அனைத்தும் ஏற்கனவே பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பயிற்சி விமானங்கள் என பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்புடன் தொடா்புடைய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-ஜிஹாத் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவத்தால் மீண்டும் தாலிபான் மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்துள்ளது.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !