உலகம்
அமேசானையும் விட்டுவைக்காத வறட்சி.. பருவநிலை மாற்றம் காரணமாக செத்து மிதக்கும் டால்பின்கள் !
சமீப காலமாக பருவநிலை மாற்றம் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக குளிர் பிரதேசங்களாக அறியப்படும் ஐரோப்பிய நாடுகளில் சில மாதங்களுக்கு முன்னர் கடும் வெப்ப அலை வீசியது.
இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 முதல் 45 டிகிரி வரை வெப்பம் பதிவானதால் அங்குள்ள மக்கள் கடும் துன்பத்தை அனுபவித்தனர். பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சில நாடுகளில் பெருமழை பெய்து கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் பல நாடுகளில் போதிய மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக ஆப்ரிக்க நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பொழியாத சூழலில் இந்தாண்டு கடும் வறட்சி நிலவி வருகிறது. அந்த வகையில் தற்போது பிரேசிலில் கடும் வெப்பம் காரணமாக ஏராளமான டால்பின்கள் செத்து மிதக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னமெரிக்காவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய காடான அமேசான் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெப்பம் பதிவாகி வருகிறது. அதிலும் அங்குள்ள சில இடங்களில் வழக்கத்துக்கு மாறாக வெப்பநிலை 39 டிகிரியையும் தாண்டியுள்ளது.
இதன் காரணமாக பிரேசில் நாட்டில் அமைந்துள்ள அமேசான் காடுகளில் உள்ள டெஃபே ஏரியில் நூறுக்கும் அதிகமான டால்ஃபின்களும், ஆயிரக்கணக்கான மீன்களும் இறந்துள்ளதாக பிரேசில் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது. அதிலும், இது குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கடும் வறட்சிக்கு பருவநிலை மாற்றம் காரணமாக இருந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த சில வருடங்களாக பிரேசிலில் அமேசான் காடுகள் விவசாயத்துக்காக அழைக்கப்பட்டு வருவதும் இந்த பருவநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!