உலகம்
தவிர்க்கப்பட்ட பெருமுடக்கம்.. இறுதி நேரத்தில் பெரும் அபாயத்தில் இருந்து தப்பிய அமெரிக்கா.. நடந்தது என்ன ?
அமெரிக்காவில் அரசு துறைக்கான செலவுகள் ஆண்டுதோறும் பட்ஜெட் ஒதுக்கீடு அடிப்படையில் ஒதுக்கப்படும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் அரசு ஊழியர்களுக்கு ஊதியம், பொது செலவுகளுக்காக நிதி, அரசு கட்டிடங்களுக்கான பராமரிப்பு செலவு போன்றவை இதிலிருந்தே வழங்கப்படும்.
இந்த பட்ஜெட் ஆண்டுதோறும், அமெரிக்காவின் இரண்டு சபைகளுக்கு (நாடாளுமன்றம் ) வழங்கப்பட்டு அவை அங்கு ஒப்புதல் பெற்ற பின்னரே நடைமுறைக்கு வரும். இதன் காரணமாக இந்த பட்ஜெட் தாக்கல் எப்போதும் அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்.
ஆனால், இந்த முறை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சியினர் ஆதிக்கம் செலுத்தி வருவதால், இந்த மசோதாவுக்கு அங்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அதிலும் அமெரிக்கா பொருளாதார பாதிப்பில் சிக்கியுள்ள நிலையில், உக்ரைனுக்கு கூடுதல் நிதியுதவி அளிப்பு போன்ற சில அம்சங்களுக்கு குடியரசுக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் காரணமாக இந்த மோசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாத நிலை இருந்தது. மசோதாவை நிறைவேற்றக் கடைசி நாள் நேற்று என்பதால் இந்த மோசோதா நிறைவேறாவிட்டால் அமெரிக்காவே முடங்கும் நிலை ஏற்பட்டது. ஏராளமான அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கமுடியாத நிலை ஏற்படும்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பிரதிநிதிகள் சபையின், சபாநாயகரும் குடியரசு கட்சியின் முக்கிய தலைவருமான கெவின் மெக்கார்த்தி இந்த மசோதாவுக்கு ஆதரவு தருவதாக அறிவித்தார். இதன் காரணமாக அவரின் ஆதரவு எம்.பி-க்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தனர். இதன் காரணமாக அவை முடிவடைய சிறிது நேரம் மட்டுமே இருந்த நிலையில் மோசோதா நிறைவேறியது. அதே நேரம் உக்ரைனுக்கு கூடுதல் நிதியுதவி அளிப்பு போன்ற பல்வேறு அறிவிப்புகள் இந்த மசோதாவில் இருந்து நீக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”இடஒதுக்கீடு கொள்கையின் பிதாமகன் தமிழ்நாடு” : சட்டப்பேரவையில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
”இன்ஸ்டா ரீல்ஸ் அரசியல் செய்யும் பழனிசாமி” : அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
-
தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!
-
இரட்டை இலக்கை எட்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமை!