உலகம்

எம்.பி to துணை பிரதமர்.. சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் தமிழர்: யார் இந்த தர்மன் சண்முகரத்னம்?

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 3ம் தேதியுடன் நிறைவு பெருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக அதிபர் பதவியில் இருந்த ஹலிமா யாக்கோப் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். இதனையடுத்து அடுத்த அதிபர் யார் என்ற போட்டி தீவிரமடைந்துள்ளது.

இதனையடுத்து அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் (66), இங் கொக் சொங் (76), டான் கின் லியான் (75) ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

மூன்று பேரும் முக்கிய நபர்கள் என்பதால் அதிபர் தேர்தல் களம் மும்முனைப் போட்டிக்கான களமாக அமைந்துள்ளது. இந்த அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் ஆகஸ்ட் 30ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்த அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவு செப்டம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ளது.

புகைப்பட கலைக்கான ஆஸ்கர் விருது.. WPPH சர்வதேச விருதைப் பெறும் முதல் தமிழர் : யார் இந்த செந்தில் குமரன்?

இதுவரை இல்லாத வகையில், அதிபர் தேர்தலில் முதன்முறையாக வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் மக்கள் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 10 முக்கிய நகரங்களில் சிங்கப்பூர் மக்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தேர்தலில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் தர்மன் சண்முகரத்னம். சிங்கப்பூரில் குடிபெயர்ந்த தர்மன் சண்முகரத்னம் குடும்பத்தினர் அங்கேயே இருந்து பெரும் செல்வாக்கை பெற்றுள்ளனர்.

இதனைடுத்து கடந்த 2001ம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தர்மன் சண்முகரத்னம் எம்.பி.யாக பதவி வகித்து வந்தார். தொடர்ந்து அதேதொகுதியில் 4 முறை போட்டியிட்டு 20 வருடங்களுக்கு மேலாக எம்.பி.யாக தொடர்ந்துள்ளார்.

சந்திரயான் 3 சாதனைக்கு காரணமாக இருந்த தமிழர்.. யார் இந்த வீர முத்துவேல்?

22 ஆண்டுகாலம் அரசியலில் பணித்த தர்மன் சண்முகரத்னம் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார். மேலும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் அறங்காவலர் வாரியத்தின் தலைவராகவும் இருந்துவந்துள்ளார்.

இந்நிலையில், தர்மன் சண்முகரத்னம் தான் வகித்த அமைச்சரவையில் பதவில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு அதிபர் தேர்தலில் களம் இறங்கியுள்ளார். மேலும் கட்சியில் இருந்தும் விலகியுள்ளார். இவரின் இந்த முடிவு கட்சிக்கு பேரிழப்பு என சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வருத்தம் தெரிவித்திக்கிறார்.

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்னத்திற்கு ஆளுங்கட்சியின் ஆதரவு இருப்பதால் அவருக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக சிங்கப்பூர் ஊடகங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சந்திரயான் 3 சாதனைக்கு காரணமாக இருந்த தமிழர்.. யார் இந்த வீர முத்துவேல்?