உலகம்
“கூலிப்படை ஆர்மி.. வாக்னர் குழு தலைவரை போட்டு தள்ளிய ரஷ்ய கும்பல் ?” : சினிமாவை மிஞ்சும் கிரைம் ஸ்டோரி !
உலகில் மிகப்பெரிய வல்லரசு நாடுகளும், அதன் அடுத்தக்கட்ட இடத்திற்குப் போட்டிப்போடும் நாடுகளும் தனியார் ஆர்மியை உருவாக்கி வைத்திருப்பது உலக அரசியலில் வழக்கமான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அமெரிக்காப்போன்ற வல்லாதிக்கம் செலுத்தும் நாடு தங்களுக்கு கீழ் அடிபணியாத நாடுகள் மீதும், முக்கிய புள்ளிகள் மீதும் அடியாட்களை ஏவுவதற்கு பதிலாக இந்த தனியார் ஆர்மியைக் கொண்டு அச்சுறுத்துவதாக கூறப்படுகிறது.
அந்தவகையில், Wagner Group என்ற முன்னாள் ராணுவ வீரர்களை கொண்டு குழு இத்தகைய பணிகளை காசு வாங்கிக்கொண்டு செய்து வருகிறது. முதலில் இந்தக் குழு ரஷ்யாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக பல்வேறு கதைகள் உள்ளது. ஆனால் அவை எதுவும் நிருபிக்க முடியாததால் ரஷ்யா இதுகுறித்து வாய் திறப்பதில்லை.
இந்நிலையில் சமீபத்தில் இக்குழு அமெரிக்காவின் முக்கிய புள்ளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், அதனால் உக்ரைன் போரை வைத்து ரஷ்யாவிற்கு எதிராகவும் இக்குழு செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் இக்குழுவில் உள்ள சிலரை ரஷ்ய ராணுவத்துடன் இணைக்கும் பணியும் நடந்ததால் ரஷ்யா - வாக்னர் குழு இடையே மோதல் அதிகரித்தது.
இதன் தலைவராக இருக்கும் பிரிகோஜின் நடவடிக்கை தொடர்ச்சியாக அமெரிக்காவிற்கு ஆதரவாகவும், ரஷ்யாவிற்கு எதிராக இருப்பதாகவும் கருதப்பட்டது. அமெரிக்காவின் சி.ஐ.ஏ சுமார் 6.2 பில்லயன் டாலரை கொடுத்து ரஷ்யாவில் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்ததாகவும் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் தனி பிரிகோஜின் விமானத்தில் சென்ற நிலையில் அவர் சுட்டுவீழ்த்தப்பட்டார். இந்த விமான தாக்குதலில் பிரிகோஜின் பலியானார். இந்த தாக்குதல் ரஷ்யா நடத்தியதாக வாக்னர் குழு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் : எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?