உலகம்
உயிருடன் காதலியை புதைத்த முன்னாள் காதலன்.. நீதிமன்ற விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!
இந்தியாவைச் சேர்ந்தவர் ஜாஸ்மீன் கவுர். இவர் நர்சிங் படிப்பதற்காக ஆஸ்திரேலியாவிற்குச் சென்றார். அங்கு அவருக்கு தாரிக்ஜோத் சிங் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்தனர்.
பின்னர் இவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காதலனை ஜாஸ்மீன் கவுர் பிரிந்துள்ளார். காதலி விட்டுச் சென்றதால் ஆத்திரமடைந்த தாரிக்ஜோத் சிங் அவரை பழிவாங்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி அவரை காரில் கடத்தி சென்று, ஃபிளிண்டர்ஸ் ரேஞ்சஸ் என்ற மலைப்பகுதியில் அடித்து கொடுமைப் படுத்தியுள்ளார். பிறகு அவரை உயிருடன் புதைத்து கொலை செய்துள்ளார்.
இந்த கொடூர கொலை சம்பவம் ஒரு ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்ற விசாரணையின் போதுதான் தாரிக்ஜோத் சிங் நடந்தவற்றை முழுமையாக ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து நீதிமன்றம் தாரக்ஜோத் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
“ஆணவத்தால், திமிரால், அளவுக்கு மீறிய தான்தோன்றித் தனத்தால் தோற்றவர் பழனிசாமி” : முரசொலி கடும் விமர்சனம்!
-
பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2025 : தங்கப்பதக்கம் வென்ற தீக்ஷாவுக்கு துணை முதல்வர் பாராட்டு!
-
ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
-
காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
-
“இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!