உலகம்
அட்லாண்டிக் கடலுக்கு அடியில் மாயமான 5 கோடீஸ்வரர்கள்.. தொடரும் டைட்டானிக் கப்பலின் மர்மங்கள்!
1912ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகளை ஏற்றிக் கொண்ட டைட்டானிக் கப்பல் அமெரிக்காவிற்குச் சென்றது. இந்த கப்பல் அட்லாண்டிக் கடல் பகுதியில் சென்றபோது பனிப்பாறை மீது மோதி டைட்டானிக் கப்பல் இரண்டாக உடைந்து கடலுக்கு அடியில் மூழ்கியது.
இந்த விபத்தில் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உலக வரலாற்றில் மிகவும் மோசமாகக் கப்பல் விபத்தாக இந்த விபத்து தற்போது வரை பார்க்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து நடந்து 100 ஆண்டுகளுக்கு பிறகுதான் 1958ம் ஆண்டு டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
1997ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் விபத்தை மையமாக வைத்து டைட்டானிக் படம் வெளியானது. இப்படத்தில் டைட்டானிக் கப்பல் எப்படி விபத்தைச் சந்தித்தது என்ற கோரக் காட்சியை அப்படியே விளக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களைக் கடலுக்கு அடியில் சென்று பல ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் டைட்டானிக் கப்பலைப் பார்வையிடச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லவும் பல நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் ஹமிஷ் ஹார்டிங், ஷஷாத் தாவூத், இவரது மகன் சுலைமான் தாவூத், பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் அதிபர் பால் ஹெண்ட்ரி, ஓஷன்கேட் கப்பல் நிறுவனத்தின் தலைவர் ஸ்டாக்டன் ரூஷ் ஆகிய 5 பேர் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் மூலம் டைட்டானிக் கப்பலைப் பார்வையிடக் கடலுக்கு அடியில் சென்றனர்.
இவர்கள் கடந்த 18ம் தேதி 700 கிலோ மீட்டர் சென்றபோது இவர்களது கப்பலின் கிக்னல் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து இவர்களை மீட்பதற்கான பணி நடைபெற்று வருகிறது.
மேலும் இவர்கள் கப்பல் மாயமான இடத்திலிருந்து 30 நிமிட இடைவெளியில் பயங்கர சத்தம் கேட்கிறது. இது மாயமான கப்பலில் இருந்துதான் சிக்னல் வருகிறது என தேடுதல் குழுவினர் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!