உலகம்
அமேசான் காடுகளில் காணாமல் போன சிறுவர்கள்.. 40 நாட்களுக்கு பின்னர் உயிரோடு மீட்பு.. நடந்தது என்ன ?
கடந்த மே மாதம் 1ம் தேதி அன்று ஒரு விமானத்தில் ஒரு தாய், அவரது கணவர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த ஒரு முதியவர் மற்றும் நான்கு குழந்தைகள் என மொத்தம் 7 பேர் பிரேசில் நாட்டின் அரராகுவாராவில் இருந்து 300 கி.மீ தொலைவுள்ள கொலம்பியா நாட்டின் சான் ஜோஸ் டெல் குவேரியாருக்குப் சென்றுள்ளனர்.
இவ்ர்கள் சென்ற விமானம் அமேசான் காடுகளுக்கு நடுவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் தொடர்பாக விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் மீட்பு படையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதன்படி அவர்கள் விமானம் இறுதியாக விபத்துக்குள்ளான போது இருந்த இடத்தில் தேடியபோது அங்கு விமானத்தில் பயணித்த தாய், தந்தை மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த ஒரு முதியவர் என 3 பேரின் சடலத்தை அங்கு பார்த்துள்ளனர். ஆனால், அதில் பயணித்து 4 சிறுவர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து சில நாட்கள் தேடுதலுக்கு பின்னர் அந்த சிறுவர்கள் விபத்தில் இருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சிறுவர்களை தேடும் படி முடுக்கிவிடப்பட்டது. இதில் உள்ளூர் பழங்குடி மக்களும் களத்தில் இறக்கிவிடப்பட்டனர்.
அதன்படி பல்வேறு தடயங்களை வைத்து அந்த சிறுவர்களை நெருங்கிய மீட்புப்படையினர் இறுதியில் 40 நாட்களுக்கு பின்னர் அந்த 4 சிறுவர்களையும் உயிரோடு கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த சிறுவர்கள் மீட்கப்பட்டு அவ்ர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. பயங்கரமான அமேசான் காடுகளில் 40 நாட்கள் சிறுவர்கள் உயிரோடு தாக்குப்பிடித்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.50 இலட்சத்தில் பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவனுக்கு திருவுருவச் சிலை... திறந்து வைத்தார் முதலமைச்சர் !
-
“தமிழ்நாட்டில் பொய்யும், ஒப்பனையும், கற்பனையும் ஒருபோதும் நீடிக்காது” - RN ரவிக்கு கி.வீரமணி பதிலடி!
-
ஈரோடு மாவட்டத்திற்கான 6 புதிய அறிவிப்புகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது என்ன?
-
“திமிரெடுத்து பேசும் ஆளுநர் ஆர்.என்.ரவி.யின் திமிரை நாம் அடக்க வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ஈரோடு - 1,84,491 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் : 23 புதிய திட்டப் பணிகள்!