உலகம்
நாய்க்கு பதிலாக நீலக் குருவி.. மீண்டும் Twitter லோகோவை மாற்றிய எலான் மஸ்க்.. இதுதான் காரணமா ?
உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே ட்விட்டரை கைப்பற்றிய கையோடு இனி ட்விட்டரில் 'ப்ளூடிக்' பெற மாதம் இந்திய மதிப்பில் ரூ.719 சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்புக்கும் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் தனது முடிவில் எலான் மஸ்க் பின்வாங்காமல் இருந்தார். மாத சந்தா செலுத்தக் கூடிய யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் என மஸ்க் திருத்தம் செய்திருந்ததால் சந்தா கட்டிய எல்லாருக்கும் எந்த சரிபார்ப்பும் இல்லாமல் ப்ளூ டிக் வழங்கப்பட்டது.
ஆனால் முன்னணி நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் பெயரில் போலி ப்ளூ டிக் கொண்ட கணக்குகள் வலம்வருவது ட்விட்டர் மீதான நம்பிக்கையை குலைத்ததால் ப்ளூ டிக்' சந்தா வழங்குவதை டிவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியது.அதனைத் தொடந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த ப்ளூ டிக் சேவை மீண்டும் அமல் படுத்தப்பட்டு சாதாரண வாடிக்கையாளர்கள் 9 டாலர் கொடுத்ததும் ஐபோன் சந்தாதாரர்கள் 11 டாலர்கள் கொடுத்தும் இந்த சேவையை பெறலாம் என அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் இரண்டு நாட்களுக்கு முன்னர் யாரும் எதிர்பாராத வகையில் ட்விட்டர் செயலியின் லோகோவையே மாற்றினார் எலான் மஸ்க். ட்விட்டரின் லோகோவை ஏன் மாற்றினார் என்பதற்கும் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்திலேயே விளக்கமளித்துதார். அதில் முன்னர் ஒரு பயனர் தன்னிடம் ட்விட்டர் லோகோவை 'Doge' படமாக மாற்றக் கூறியதால் தான் மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.அப்போது அந்தப் பயனருக்கு எலான் மஸ்க், லோகோவை மாற்றுவதாக உறுதியளித்ததால் நீல குருவிக்குப் பதிலாக முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் Dogecoin லோகோவான நாய் படத்தை மாற்றியுள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் ட்விட்டரின் லோகோவாக நீல நிற குருவியையே மாற்றியிருக்கிறார் எலான் மஸ்க். நாயின் படத்தை லோகோவாக வைத்த நிலையில், அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும், பங்குசந்தையில் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளில் வீழ்ச்சியை சந்தித்தது. இதன் காரணமாகவே எலான் மஸ்க் இதுபோன்ற நடவடிக்கையை எடுத்ததாக கூறப்படுகிறது.
Also Read
- 
	    
	      
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!
 - 
	    
	      
“கால்களில் விழுந்து பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
 - 
	    
	      
”பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” : Chennai Press Club கண்டனம்!
 - 
	    
	      
தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக 2 பேர் நியமனம் : கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
 - 
	    
	      
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!