உலகம்
“கடைசி பிறந்தநாள் - உலகம் முழுவதும் வாழ்த்து அட்டை பெற்ற 5 வயது சிறுமி..” : பெற்றோர் சொன்ன சோக செய்தி!
தனது மகளின் கடைசி பிறந்தநாளுக்கு வாழ்த்து அட்டை அனுப்புமாறு பெற்றோர் வைத்தை கோரிக்கைக்கு இனங்க பல ஆயிரம் வாழ்த்து அட்டை வந்த ஊடக செய்தியை பலரும் பார்த்திருக்ககூடும். அந்த வாழ்த்து செய்திக்கு பிறகு இப்போது சோகமான செய்தியை 5 வயது குழந்தையின் பெற்றோர் தெரிவித்திருக்கின்றனர். அவை உலக நாட்டு மக்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
ஹீதர் மற்றும் ஜாக் தம்பதியரின் 5 வயது குழந்தை டெலானி கிரிங்ஸ் (Delaney Krings). டெலானி கிரிங்ஸூக்கு 4 வயது இருக்கும் போது, காதுவலி என பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து மருத்துவரை அனுகி, காதுவலிக்கு சிசிக்கை பெற்று வந்தார்.
இதனிடையே நாளடைவில் பிரச்சனை வேறாக இருப்பதை மருத்துவர் அறிந்து சிறுமியின்பெற்றோரை அழைத்து, சிறுமிக்கு தீவிர மூளைக் கட்டி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக, டிஎம்ஜி எனப்படும் பரவலான மிட்லைன் க்ளியோமா எனத் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன பெற்றோர், டெலானி கிரிங்ஸின் 5வது பிறந்தநாளை கொண்டாட முடிவு எடுத்தனர்.
அதற்காக தங்களின் குழந்தைகளுக்காக வாழ்த்து அட்டை அனுப்பி வைக்குமாறு, கேட்டுக்கொண்டனர். மேலும் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், ஃபார் தி லவ் ஆஃப் டெலானியில் என தனது பிறந்தநாள் அட்டைகளை அனுப்புமாறு பின்தொடர்பவர்களிடம் கேட்டார். இதனையடுத்து தனது 5வது பிறந்தநாளை முடித்த பிறகு கடந்த ஜனவரி 28 அன்று சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.
இதுதொடர்பாக அவரது பெற்றோர் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் ஸ்வீட் ஏஞ்சல் பேபியைப் பார்த்துவிட்டு இப்போதுதான் வீட்டிற்கு வந்தேன். அவளைப் பிடித்துக் கொள்ள, அவளைப் பார்க்கவும், அவளுடைய இனிமையான முகத்தை முத்தமிடவும், அவளுடைய சிறிய குரலைக் கேட்கவும் என் இதயம் ஏங்குகிறது.
ஆனால் அவளது கல்லறையில் வானவில் பூவை வைப்பது மட்டுமே என்னால் முடிந்தால், அதைத்தான் நான் பிடித்துக் கொள்ள வேண்டும். என் இனிய குழந்தையே, உன் ஏஞ்சல் சிறகுகளால் உயரப் பற. நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!