உலகம்
உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக வாழ தகுதியற்றதாக மாறிய நகரம்.. ட்ரோன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒரு வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. , உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் வலுவான அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்கிய நிலையில், இது மோதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றுள்ளது.
மேலும், சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென உக்ரைனுக்கு சுற்றுப்பயணம் செய்தது ரஷ்யாவின் கோவத்தை பலமடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா அறிவித்த நிலையில், தற்போது தனது தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ரஷ்யா-உக்ரைன் இடையே நடைபெறும் இந்த போரில் உக்ரைனைச் சேர்ந்த டொனெட்ஸ்க் பகுதியிலுள்ள மரிங்கா என்ற நகரம் முற்றிலும் அழிந்துள்ள விடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரோன் மூலம் எடுக்கப்பட்ட விடியோ காட்சியை உக்ரைன் வெளியிட்டுள்ள நிலையில், அது கட்டிடங்கள் அனைத்தும் முற்றிலும் உதிர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், 10,000 பேர் தங்கியிருந்த இந்த நகரம் தற்போது மனிதர் வாசிக்க தகுதியில்லாததாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த நகரத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் ராணுவ நிர்வாகம், காவல்துறை அதிகாரிகளால் முழுவதுமாக வெளியேற்றப்பட்டனர் என்றும், இன்றைய சூழலில் அங்கு வாழ்வது சாத்தியமற்றது என்றும் உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
போராளிக்கான தழும்பு...! விஜய்யின் 'மிசா' குறித்த விமர்சனத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி
-
நடிக்காதே நயவஞ்சகா...! விஜய் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் : முரசொலி ஆவேசம்!
-
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - தி.மு.க. சார்பில் களம் இறங்கும் சேது : மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
-
“இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை!” : முதல்வருக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் கண்டனம்!
-
“சட்டமன்ற உரிமை என்பது அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமல்ல!” : தி.மு.க கொறடா எ.வ.வேலு கண்டனம்!