உலகம்
நடுவானில் விமானத்தின் அவசர கதவை திறந்த இளைஞர் அதிரடி கைது.. ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு என தகவல் !
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று பாஸ்டன் நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளது. அந்த விமானத்தில் டோரஸ் (வயது 33) என்ற பயணி விமானத்தின் அவசரகால கதவு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துகொண்டிருந்தார்.
அப்போது திடீரென நடுவானில் டோரஸ் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயற்சித்துள்ளார். இதனைக் கண்டு சக பயணிகள் அலற, அங்கு வந்த விமான பணிப்பெண் ஒருவர் டோரஸின் செயலை தடுத்ததோடு அவரை தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த டோரஸ் அந்த பணிப்பெண்ணை தான் வைத்திருந்த இரும்பு கரண்டியால் தாக்கியதோடு அவரின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். உடனே சுதாரித்த சக பயணிகள் அந்த பணிப்பெண்ணை மீட்டனர். மேலும், சிறிது நேரத்தில் டோரஸ் அவரின் இருக்கையில் அமரவைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விமான பைலட்கள் இதுகுறித்து பாஸ்டன் விமான நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து விமானம் பாஸ்டன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் தயாராக இருந்த விமானநிலைய போலிஸார் டோரசை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தவறின் காரணமாக அவருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்படும் என்றும், அவருக்கு அதிகபட்சமாக ஆயுள்தண்டனை வரை கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !