உலகம்
6 மீட்டர் இடைவெளியில் பறந்த அமெரிக்கா - சீன போர் விமானங்கள்.. நடந்தது என்ன ?
சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவின் வல்லாதிக்கத்துக்கு சவாலாக சீனா உருவெடுத்துள்ள நிலையில், பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கு இடையில் மோதல் போக்கு நீடிக்கிறது. அண்மையில் சீனா சொந்தம் கொண்டாடும் தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது பதற்றத்தை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வான்வெளி பரப்பில் பறந்த ஒரு பலூனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. மேலும், இந்த பலூன் சீனாவுடையது என்றும் தங்களை உளவு பார்க்க சீனா அனுப்பியுள்ளதாகவும் அமெரிக்க ராணுவம் குற்றம்சாட்டியது.
ஆனால், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை சீனா முற்றிலும் மறுத்தது. அந்த பலூன் அமெரிக்காவை உளவு பார்க்க அனுப்படவில்லை இல்லை என்றும் கூறியது. மேலும் இந்த பலூன் வானிலையை ஆய்வு செய்ய அனுப்பட்டதாகவும் இதில் உளவு பார்க்கும் விமான கருவிகள் எதுவும் இல்லையென்றும் விளக்கமளித்து. அதோடு இந்த பலூன் காற்றின் வேகம் காரணமாக அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் நுழைந்துள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை அமெரிக்காவிடம் அளிக்கவுள்ளோம் என்றும் சீனா அறிவித்தது.
இந்த நிலையில், கடந்த கடந்த ஜனவரி 21ம் தென் சீன கடல் பகுதியில், அமெரிக்க போர் விமானமும், சீன போர் விமானமும் மிக அருகருகே சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் சீன கடல் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடும் நிலையில், இது தொடர்பாக அந்த பகுதியில் இருக்கும் சில நாடுகளுடன் சீனாவுக்கு பிரச்னை இருக்கிறது. அந்த நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது.
அந்த வகையில் தென் சீன கடல் பகுதியில் இருக்கும் பிலிப்பைன்ஸில் அமெரிக்காவின் ராணுவ தளம் அமைந்துள்ளது. அங்கிருந்து தென் சீன கடல் பகுதியில் சீன எல்லை அருகே அமெரிக்காவின் US Air Force RC-135 விமானம் ரோந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு சீனாவின் J-11 விமானம் அமெரிக்க விமானத்திற்கு மிக அருகில் வந்துள்ளது.
இந்த இரண்டு விமானங்களுக்கும் இடையில் வெறும் 6 மீட்டர் இடைவெளியே இருந்ததால் இரண்டு விமானங்களும் மோதிக்கொள்ளும் அசாதாரண நிலை ஏற்பட்டது. ஆனால், சிறிது நேரத்தில் அமெரிக்க போர் விமானம் சீனா எல்லைக்கு அருகே இருந்து பின்வாங்கியதால் அங்கு பெரிய மோதல் தவிர்க்கப்பட்டது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Also Read
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!