உலகம்

LAYOFF LAYOFF LAYOFF.. அமெரிக்காவில் இருந்து வெளியேறும் 80,000 இந்தியர்கள்: IT துறையில் நடப்பது என்ன?

உலகம் முழுவதும் ஐ.டி நிறுவனங்களில் மட்டும் இல்லாமல் மென்பொருள் நிறுவனங்கள், உணவு டெலிவரி நிறுவனங்கள், மியூசிக் ஸ்ட்ரீம் நிறுவனங்கள் என படிப்படியாக அனைத்து பெரிய முன்னணி நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருவது தொடர்கதையாக மாறியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும், ட்விட்டர், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், விப்ரோ, ஸ்விக்கி, கூகுள் போன்ற நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இப்படிப் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் சரிபாதி பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

அமெரிக்காவில் மட்டும் கடந்த இரண்டு மாதத்தில் 2 லட்சம் பேர் ஐடி நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் 40% பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. மேலும் அடுத்தடுத்து முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருவதால், வேலை இழந்தவர்கள் வேறு நிறுவனத்தில் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

குறிப்பாக அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு H-1B என்ற விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாவின் விதிப்படி ஒருவர் வேலையை இழந்தாலோ அல்லது வேறு வேலையில் சேர்ந்தாலோ 60 நாட்களுக்குள் புதிதாக H-1B புதுப்பித்து வாங்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்.

இதனால் தற்போது வேலை இழந்துள்ள 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு 60 நாட்களுக்குள் வேலை கிடைக்கவில்லை என்றால் அமெரிக்காவை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Also Read: மீட்டிங் வரச்சொல்லி 3000 பேரை வேலையை விட்டுத் தூக்கிய Goldman Sachs நிறுவனம்: தினம் ஒரு layoffs!