உலகம்
24 நாட்களாக நடுக்கடலில் சிக்கித்தவித்த படகோட்டி.. ஒரு வார்த்தையால் உயிர்பிழைத்த அதிசயம்.. நடந்தது என்ன ?
வடக்கு அமெரிக்கா கண்டத்தை சேர்ந்த டோமினிக்கா என்னும் நாட்டை சேர்ந்தவர் எல்விஸ் ஃப்ரான்கோய்ஸ். இவர் அந்த பகுதியில் இருக்கும் தீவின் அருகில் தனது படகை பழுதுபார்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென ஏற்பட்ட பெரிய அலை ஒன்றில் இவர் படகோடு கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டுள்ளார்.
கரீபியன் கடலின் சிக்கிக்கொண்ட அவர் முதலில் தொலைத்தொடர்பு சாதனங்கள் உதவியோடு நண்பர்களை உதவிக்கு அழைத்தும் அவருக்கு உதவி கிடைக்கவில்லை. பின்னர் HELP என்ற வார்த்தையை படகின் பக்கவாட்டில் எழுதி உதவிக்காக காத்திருந்துள்ளார்.
24 நாள்களாக நடுக்கடலில் சிக்கித்தவித்த அவர் தனது படகில் இருந்து கெட்ச்சப் , பூண்டு, மேகி ஆகியவற்றை உண்டு உயிர்வாழ்ந்துள்ளார். பின்னர் இவர் இருந்த பகுதியின் மேல் ஒரு விமானம் பறந்துள்ளது. அதனைப் பார்த்த இவர் தன்னிடம் இருந்த கண்ணாடி மூலம் ஒளியின் பிரதிபலிப்பை விமானத்தின் விமானிக்கு காட்டியுள்ளார்.
இதன் மூலம் ஒருவர் கடலில் சிக்கியிருப்பதை உணர்ந்த விமானி, அரசு அதிகாரிகளுக்கு இதுகுறித்து தெரியபடியுள்ளார். அதன்படி நடுக்கடலில் சிக்கியிருந்த எல்விஸ் பத்திரமாக்க மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய எல்விஸ் தான் உயிரோடு இருப்போம் என்ற நம்பிக்கையையே இழந்து விட்டதாக கூறியுள்ளார்.
கொலம்பியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள லா குஅஜிரா என்னும் இடத்திலிருந்து எல்விஸ் மீட்கப்பட்டதாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, விரைவில் அவர் குணமாகியதும் அவரின் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என கொலம்பிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !