உலகம்
தேர்தல் முடிவை ஏற்கமுடியாது.. நாடாளுமன்றத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள்.. போர்க்களமாக பிரேசில் !
பிரேசில் நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அப்போதைய அதிபரும் தீவிர வலதுசாரியான போல்சனாரோவும், முன்னாள் அதிபரும் இடதுசாரி வேட்பாளருமான லுலா டி சில்வாவும் போட்டியிட்டனர்.
தென்னமெரிக்க கண்டத்தின் மிகப்பெரிய நாடு என்பதால் இந்த தேர்தல் சர்வதேச அளவில் பெரும் கவனம் ஈர்த்தது. இந்த தேர்தலில் வலதுசாரி வேட்பாளர் போல்சனாரோவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்கள் செயல்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், நாட்டின் வன்முறைக்கு காரணமாக போல்சனாரோ இருந்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த தேர்தல் முடிவுகளில் வலதுசாரியான ஜெயிர் போல்சனாரோவை தோற்கடித்து இடதுசாரி வேட்பாளர் லுலா டி சில்வா வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றார். ஆனால் இந்த தேர்தல் முடிவுகளை போல்சனாரோவின் ஆதரவாளர்கள் ஏற்காமல் நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பிரேசிலியா நகரில் திரண்ட போல்சனாரோவின் ஆதரவாளர்கள், நாடாளுமன்ற கட்டடம், உச்சநீதிமன்றம் மற்றும் அதிபர் மாளிகையினுள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அங்கிருந்த ஜன்னல்கள் மற்றும் பொதுசொத்துக்களையும் சேதப்படுத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதனிடையே அதிபர் லுலா டி சில்வாவின் உத்தரவுப்படி கண்ணீர் புகை குண்டுகளை வீசி போல்சனாரோ ஆதரவாளர்களை காவல்துறையினர் விரட்டி அடித்தனர். அதே நேரம் இந்த வன்முறைகளை தான் தூண்டி விடவில்லை என்று போல்சனாரோ கூறியுள்ளார். மேலும், இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிகழ்வுகளால் பிரேசிலின் தலைநகரம் போர்க்களம் போல காட்சி அளித்தது.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!