உலகம்

Alexa ஸ்பீக்கர் இருக்கிறதா.. இந்த இடத்தில் எல்லாம் அதை பயன்படுத்த வேண்டாம் -நிபுணர்கள் எச்சரிக்கை !

உலகம் முழுவதும் விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியில், நாளுக்கு நாள் புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. நாம் உட்கார்ந்த இடத்தில் இருந்தே உலகின் பல தகவல்களை அறிந்து வருகிறோம்.தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமல் இருந்தவர்களைக் கூட கொரோனா வைரஸ் இவர்களைத் தொழில்நுட்பத்தின் பக்கம் வரவைத்துவிட்டது. பள்ளி வகுப்பறைகள் இன்று மொபைல் வகுப்பறையாக மாறிவிட்டன.

வழக்கமாக தொழில்நுட்பத்தில் புதிய, புதிய வளர்ச்சியைக் கண்டுபிடித்து வரும் அமேசான் நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு Alexa எனும் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்தது. இந்த அலெக்ஸாவிடம் நாம் மனிதரிடம் பேசுவதை போல் பேசாலாம். நாம் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் அலெக்ஸா பதில் சொல்லும் என்பதால் இது இளைஞர்கள் மத்தியில் பிரபலம்.

மேலும், தங்கள் வீடுகளில் இருக்கும் ஸ்மார்ட் விளக்குகள், விசிறிகள், ஏ.சிக்கள், கேமராக்கள், ஏர் பியூரிஃபையர்கள், டி.வி.களை ஆஃப், ஆன் செய்ய அலெக்சா ஸ்பீக்கரை பயன்படுத்த முடியும். ஆனால், இதனால் தனிநபர்கள் உளவு பார்க்கப்படுவதாகவும், அவர்களின் அந்தரங்க உரையாடல்கள் திருடப்படுவதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், Alexa ஸ்பீக்கரை உங்கள் வீட்டின் படுக்கையறையிலோ, குளியலறையிலோ வைத்துப் பயன்படுத்தாதீர்கள்' என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அனுமதியின்றி அந்தரங்க உரையாடல்களையும் ரெகார்டிங் செய்வதாக வெளிவந்த புகார்களில் உண்மை தன்மை இருப்பதாக சமீபத்தில் அமேசான் நிறுவனமே இது குறித்து விளக்கமளித்தது.

உரையாடல்களை ரெகார்டிங் செய்யப்படுவதை தடுக்க அலெக்ஸா ஆப்பை மொபைலில் ஓபன் செய்து, செட்டிங்ஸில் ரெக்கார்டிங் செய்யத் தேவையில்லை என இருக்கும் ஆப்ச்சனை கொடுத்துவிட்டால், அதன் பின் அலெக்ஸாவால் உரையாடல்களைப் பதிவு முடியாது' என்று அமேசான் நிறுவனம் இது குறித்து கூறியுள்ளது.

Also Read: ஏது குப்புற படுத்தால் புற்றுநோய் வருமா ? -ஷர்மிகா மீது நடவடிக்கை... மருத்துவத்துறை இணை இயக்குநர் உறுதி !