உலகம்

முகநூல் தோழியிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி இறந்துவிட்டதாக நாடகமாடிய இளம்பெண்.. சிக்கியது எப்படி ?

இந்தோனேசியா, பாலி நகரைச் சேர்ந்தவர் மாயா குணவான். இவர் சீட்டு தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் லிஸா என்ற பெண்ணுக்கும் முகநூல் பக்கம் மூலாம் கடந்த ஆண்டு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்கள் விவரங்களை பரிமாற, இதனால் மாயவிடம் லிஸாவும் சீட்டு போட தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது குழந்தைக்கு மருத்துவ செலவு என்று கூறி, மாயவிடம் இந்திய மதிப்பில் ரூ.2 லட்சம் கடனாக கேட்டுள்ளார் லிஸா. இதனை நம்பிய மாயா, அவர் கேட்ட தொகையை கொடுத்துள்ளார். மேலும் நவம்பர் 20-ம் தேதி கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து கொடுத்துள்ளார்.

நாளாக ஆக, அந்த குறிப்பிட்ட தேதியில் லிஸாவுக்கு மாயா தொடர்பு கொண்டு கடனை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் தான் இப்போது சற்று நெருக்கடியில் இருப்பதாகவும், டிசம்பர் 6-ம் தேதி கொடுப்பதாகவும் தெரிவித்தார். இதனை நம்பிய மாயா, சரி என்று கூறிவிட்டார்.

இதையடுத்து அந்த தேதியில் லிஸா மொபைல் எண்ணுக்கு மாயா தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அந்த எண் சுவிச் ஆஃப் என்று வந்துள்ளது. தொடர்ந்து முயற்சி செய்தும் அவ்வாறே வந்ததால், முகநூல் பக்கம் சென்று பார்த்துள்ளார். அப்போது லிஸாவின் மகள் நஜ்வா என்பவர் தனது தாய் கார் விபத்தில் இறந்துவிட்டதாக புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவின் கீழே, டாமியாங் என்ற நகரில் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாயா இருக்கும் இடத்தில் இருந்து, அந்த பகுதி 100 கி.மீ தாண்டியுள்ளது. விபத்து இறப்பு குறித்து பதறிப்போன மாயா, மறுபடி மறுபடியும் அந்த பதிவை பார்த்துள்ளார்.

அப்போது மருத்துவமனை ஊழியர்கள் இறந்துபோன லிசாவின் உடலை தள்ளி கொண்டு போனதாக புகைப்படம் இருந்துள்ளது. இதனால் மாயாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நன்கு உற்று நோக்கையில், அதில் இருக்கும் முகம், லிசாவின் முகத்துடன் ஒத்துப்போகவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து தீவிரமாக களத்தில் இறங்கிய மாயா, அந்த புகைப்படங்களை குறித்து கூகுளில் தேடியுள்ளார்.

அப்போது அது 2 வருடங்களுக்கு முன்பு இறந்து போன ஒரு பெண்ணின் புகைப்படம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆதரியமடைந்த மாயா, இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது, லிஸா ஏமாற்றியது தெரியவந்தது. அதோடு அவர் உயிருடன் இருப்பதும், தற்போது தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து லிசாவை தீவிரமாக தேடி வருகின்றனர். கொடுத்த கடனை திரும்ப கொடுக்க முடியாததால், தான் இறந்துபோனாதாக நாடகமாடிய பெண்ணின் செயல் இந்தோனேசியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “நா அத பாத்தேன்.. ஆனா யார்கிட்டையும் சொல்லல..” - டெல்லியை உலுக்கிய பெண் கொலை வழக்கில் தோழி அதிர்ச்சி !