உலகம்

எலான் மஸ்க்-கு 57.5 % பேர் எதிர்ப்பு.. சொந்த செலவில் சூனியம் வைத்த Twitter முதலாளி !

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், 12 மணி நேரம் பணிபுரியவேண்டும் என்ற எலான் மஸ்க்கின் மிரட்டல் காரணமாகி தானே முன்வந்தும் ஏராளமான ட்விட்டர் பணியாளர்கள் ராஜினாமாக்களை அனுப்பிவருகின்றனர்.

இந்த நிலையில், ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி (CEO ) பதவியில் தொடரலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து நேற்று முன்தினம் எலான் மஸ்க் கருத்துக் கணிப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பு தொடங்கிய 4 மணி நேரத்திலேயே சுமார் 90 லட்சம் பேர் அதில் தங்கள் வாக்குகளை பதிவிட்டு இருந்தனர்.

இந்த வாக்கெடுப்புக்கான முடிவு தற்போது வெளிவந்துள்ளது. அதில் மொத்தம் வாக்கு செலுத்தியவர்களில் 57.5 % பேர் எலான் மஸ்க் CEO பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். 42.5% பேர் மட்டுமே எலான் மஸ்க் CEO பதவியில் தொடரலாம் என கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து எலான் மஸ்க் CEO பதவியிலிருந்து விலகுவாரா அல்லது இந்த கணக்கெடுப்பு சும்மா நிகழ்த்தப்பட்டதா என்பது தெரியவரும்.

Also Read: சொந்த மண்ணிலேயே டெஸ்ட் தொடரின் White Wash: அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியை துவம்சம் செய்த இங்கிலாந்து!