உலகம்
தடைசெய்யப்பட்ட பைக் license.. Uber Cab புக் செய்து வங்கியில் கொள்ளையடித்த நூதன திருடன்: சிக்கியது எப்படி?
வங்கியில் கொள்ளையடிப்பதற்காக Uber Cab-ஐ பயன்படுத்திய திருடனின் செயல் அனைவர் மத்தியிலும் பெரும் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக தற்போதுள்ள காலகட்டத்தில் மக்கள், ola, uber போன்ற டாக்சி வசதிகளை மக்கள் தங்களுக்கு தேவைப்படும்போது போக்குவரத்துக்காக பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால் இங்கே ஒருவர் திருடுவதற்கு இது போன்ற டாக்சிகளை பயன்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா மிச்சிகனில் உள்ள சவுத்ஃபீல்டில் என்ற பகுதியில் வசித்து வருபவர் ஜேசன் கிறிஸ்மஸ். இந்த பகுதியில் ஹண்டிங்டன் என்ற வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஜேசன் கிறிஸ்மஸ், ஒரு Uber கேப் ஒன்றை புக் செய்து ஹண்டிங்டன் வங்கிக்கு சென்றுள்ளார்.
அப்போது இவர் உள்ளே சென்ற அவர், நான் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று உபேர் ஓட்டுநரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அங்கே வங்கியில் ஜேம்ஸ் கொள்ளையடித்து திரும்பி வந்துள்ளார். வந்த அவர், அதே டாக்சியில் தான் கொள்ளையடித்த பணத்தை கொண்டு லேஷெரில் உள்ள அப்பார்மென்ட் காம்ப்ளக்ஸுக்கே ஜேசன் சென்றுள்ளார்.
இதனிடையே வங்கி கொள்ளை சம்பவம் குறித்து அங்குள்ள அதிகாரிகள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில், அந்த கொள்ளை சம்பவம் குறித்து நிறைய தெரிந்தது. மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது, உபெர் டாக்சி பிடிபட்டது.
பிறகு அந்த ஓட்டுநரிடம் விசாரிக்கையில் தனக்கும் இதற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றார். பின்னர் ஜேம்ஸை இறக்கி விட்ட இடத்திற்கும் கூட்டி சென்றார். அங்கே அவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ஜேம்ஸின் லைசென்ஸ் தடை செய்யப்பட்டதால், அவரது வாகனத்தை ஓட்ட இயலாது. எனவே அவர் உபெர் டாக்சியை பயன்படுத்தியுள்ளார் என்று தெரியவந்தது.
மேலும் இதற்கும் டாக்சி ஓட்டுநருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும், வங்கி உள்ளே செல்லும்போது ஜேம்ஸ் முகமூடி அனைத்து கொண்டதும், அங்கே உள்ள ஊழியர்களை துப்பாக்கி காட்டி மிரட்டி கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், "ஜேம்ஸ் எதற்காக கொள்ளையடித்தார் என்பது தெரியவில்லை. ஆனால் இது விடுமுறை காலம் வரப்போகிறது. எனவே இந்த நேரத்தில் சிலர் இதுபோன்ற பைத்தியக்காரத்தனமான செயல்களை செய்கிறார்கள்" என்று தெரிவித்தனர். கொள்ளையடிக்க uber கேப்பை பயன்படுத்திய திருடனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!