உலகம்
இது எல்லாம் உலகசாதனையா? 97 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு சென்று கின்னஸ் சாதனை.. ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட் !
உலகில் பல வித்தியாசமான சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அதில் சில சாதனைகள் குறித்து கேட்டால் இதுயெல்லாம் சாதனையா என்று நினைக்க தோன்றும் வகையில் இருக்கும். அப்படி ஒரு சாதனையைதான் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் செய்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்கடனை சேர்ந்தவர் லுகாஸ் வால். இவர் அங்குள்ள மெட்ரோ ரயிலில் செய்த சாதனை தற்போது உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. நியூ ஆஷ்பர்ன் என்னும் ரயில் நிலையத்தில் இருந்து ஹண்டிங்டன் என்னும் ரயில் நிலையத்தை 8 மணிநேரம் 54 நிமிடத்தில் அடைந்துள்ளார். இதற்கிடையே 97 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு லுகாஸ் பயணம் பயணம் செய்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு ஸ்காட் பென்னெட் என்பவர் இந்த தூரத்தை 7 மணிநேரம் 59 நிமிடங்களில் இத்தனை ரயில் நிலையத்தை கடந்து கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். லுகாஸ் வால் அவரை விட 1 மணி நேரம் கூடுதலாக பயணம் செய்தாலும் கூடுதலாக இரண்டு ரயில்நிலையங்களை கடந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
தனது இந்த சாதனை குறித்து பேசிய அவர் "வாஷிங்டன் டி.சி-யின் மெட்ரோ ரயில் நிலையங்களில் எப்போதும் அதிக கூட்ட நெருக்கடி இருக்கும், இதன் காரணமாக விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படி பயணித்தேன். பலமுறை நான் இதுபோன்ற கூட்ட நெரிசலில் சிக்கியுள்ளேன்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
Reels அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது : அனிதா ராதாகிருஷ்ணன் கைது - எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்!
-
“வைகை மீது ஆளுநருக்கு என்ன திடீர் அக்கறை.. தமிழ்நாடு அரசே விழித்துக்கொள்” : கி.வீரமணி எச்சரிக்கை!
-
“கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜூனா தான் மெயின் அக்யூஸ்ட்” : ஆர்.எஸ்.பாரதி அதிரடி - முழு பேட்டி இங்கே!
-
“அனிதா ராதாகிருஷ்ணன் கைது.. போலீஸ் ராஜ்ஜியம்.. இந்த ஆணவம் அழிவிற்கு வழி”: மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!
-
தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது : தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை!