உலகம்

5 ஆண்டுகள் காதில் சிக்கியிருந்த மர்ம பொருள்.. பரிசோதனையில் தெரியவந்த உண்மை.. அரண்டுபோன மருத்துவர்கள் !

நவீன யுகத்தில் தொழில்நுட்பங்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. பல நேரங்களில் அது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற அளவில் வாழ்க்கையை தொழில்நுட்பங்கள் ஆக்கிரமித்துள்ளது. அதேநேரம் அதனால் ஏற்படும் சில இன்னல்களும் தவிர்க்கமுடியாததாகியுள்ளது. அப்படி ஒரு சம்பவம் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவருக்கு நிகழ்துள்ளது.

இங்கிலாந்தின் வேய்மவுத் பகுதியைச் சேர்ந்த வாலஸ் லீ என்ற 60 வயது முதியவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் உள்ள தனது குடும்பத்தினரை காண சென்றுள்ளார். அங்கு அவர் ஒரு EARBUD-ஐ வாங்கி பயன்படுத்தியுள்ளார்.

ஆனால், எதிர்பாராத விதமாக அந்த EARBUD அவரின் காதில் சிக்கிக்கொண்டுள்ளது. இதனை உணராத அந்த முதியவர் திடீரென தனக்கு காது கேட்காமல் போனதாக நினைத்துள்ளார். மேலும், வேலையின் போது ஏற்பட்ட காயத்தால் தனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் எனவும் நினைத்து அதை அப்படியே விட்டுள்ளார்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் பயன்படுத்தக் கூடிய எண்டோஸ்கோபி கிட்டை வாங்கியுள்ளார். பின்னர் அதை பரிசோதித்து பார்க்கும்போது காதில் வெள்ளை நிறத்தில் ஒரு பொருள் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ததில் அது EARBUD என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பின்னர் அதனை மருத்துவர் எடுக்க முயன்ற நிலையில், அது காதில் நன்றாக ஒட்டி இருந்ததால் வெளியே எடுப்பதில் சிரமம் இருந்துள்ளது. எனினும் இறுதியில் மருத்துவரால் EARBUD வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னரே தனக்கு காது மீண்டும் கேட்கத்தொடங்கியுள்ளதை அவர் உணர்ந்துள்ளார். இது தொடர்பாக கூறியுள்ள அவர் "என் தலையில் இதுநாள் வரை உணர்ந்த அந்த பனிமூட்டம் விலகியது தெரிந்தது. என்னால் இப்போது நன்றாகவே கேட்க முடிகிறது"என்று கூறியுள்ளார்.

Also Read: 'TWITTER ஊழியர்கள் சாப்பாட்டுக்கு மட்டும் ரூ.100 கோடி செலவு' - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட எலான் மஸ்க் !