உலகம்
40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி.. தண்ணீர், உணவின்றி 205 யானைகள் பலி - அபாயக் கட்டத்தை எட்டும் கொன்யா !
உலகம் முழுவதும் நிலவும் கால நிலை மாற்றத்தால் பல நாடுகள் அழிவுப்பாதையை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கின்றனர். சில நாடுகள் வரட்சியால் அழிவை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தால், சில நாடுகள் கடல் அறிப்பு ஏற்பட்டு நீரில் முழ்கும் அபாயங்களை நோக்கிச் சென்றுகொண்டிருகிறது.
அந்தவகையில் வரலாற்றில் இருந்துவரை இல்லாத வகையில், கொன்யா கடுமையான வரட்சியை சந்தித்து வருகிறது. கொன்யாவில் எளிய மக்களுக்கு கிடைக்கவேண்டிய தண்ணீர் ஆளும் ஆட்சியாளர்களால் கார்ப்பரேட்டுக்கு வாரிவழங்கப்படுகிறது. இதனால் மக்களுக்கு தண்ணீர் இன்றி கிடக்கின்றனர்.
மக்களுக்கே தண்ணீர் தட்டுப்பாடு என்றால் கொன்யாவில் உள்ள வனவிலங்களின் நிலையை சொல்லவே வேண்டாம். குறிப்பாக கிழக்கு ஆப்பரிக்கா நாடுகளில் கடந்த 40 ஆண்டுகளில் இதுவரை இல்லாத வரட்சியை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கின்றனர்.
இதனால் யானைகள் உள்ளிட்ட உயிரினங்கள் பலியாகும் சூழல் நிலவி வருகிறது. மேலும் வறட்சிக் காரணமாக 14 வகையான விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது.
ஆப்பரிக்க யானைகளின் பலி எண்ணிக்கையுடன் சேர்ந்து 512 வைல்ட்பீஸ்ட், 381 வரிக்குதிரைகள், 12 ஒட்டக சிவங்கி, 51 காட்டெருமைகள் ஆகியை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. கென்யாவின் முக்கிய வருமானமாக விளங்கும் சிற்றுலாத்துறையின் எதிர்க்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும் அழிந்துவரும் உயிரினமாக கருத்தப்படும் கிரவி வரிகுதிரைகள் கடந்த காலங்களில் சுமார் 49 பலியாகியுள்ளது சுற்றுசூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஓராண்டுக்குள் 205 யானைகள் வறட்சியால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
யானைகள் அதிகம் உள்ள கென்யாவில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுவதால் குடிக்க தண்ணீரும், உணவுமின்றி யானைகள் உயிரிழந்து வருகின்றன. இது குறித்து கென்யாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் பேசுகையில், வறட்சி காரணமாக இதுவரை 205 யானைகள் உயிரிழந்துள்ளது.
கென்யாவில் தொடர்ச்சியாக மழை பெய்வது குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக வடக்கு கென்யாவில் 3-வது ஆண்டாக குறைந்தபட்ச மழையளவு பதிவாகியுள்ளது. கென்யா சுற்றுலாத்துறை பகுதிகளில் உள்ள விலங்குகளுக்கு தண்ணீர், உணவு வழங்க ஏற்பாடு செய்து வருகிறது.
Also Read
-
கல்வித்தகுதியை பொது வெளியில் சொல்ல பிரதமர் மோடிக்கு என்ன தயக்கம்? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!
-
தேசிய நலனுக்கு மாறாக பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மட்டும் விளையாடலாமா? : காங்கிரஸ் கேள்வி!
-
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! : 20.59 லட்சம் தொடக்கப் பள்ளி மாணாக்கர்கள் பயன்பெறுவர்!
-
”மிரண்டு இருக்கும் நயினார் நாகேந்திரன்” : கடுமையாக சாடிய அமைச்சர் சேகர்பாபு!
-
“நன்றாக சாப்பிடுங்கள்… படியுங்கள்… விளையாடுங்கள்… வாழ்க்கை நன்றாக இருக்கும்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!