உலகம்
மகளை கடித்த நண்டு.. பழிவாங்க உயிருடன் கடித்துச் சாப்பிட்ட தந்தைக்கு நடந்த விபரீதம்!
நம் வீட்டுக் குழந்தைகள் கீழே விழுந்து அழுதால் அவர்களை உடனே சமாதானப்படுத்தும் விதமாகத் தரையை அடித்துப் பழிவாங்கி விட்டதாக கூறி குழந்தையின் அழுகையை நிறுத்தப்பார்ப்போம். இப்படி நாம் குழந்தையின் அழுகையை நிறுத்த பல ஏமாற்று வித்தைகளைக் கையாள்வோம்.
இந்நிலையில் சீனாவில் தனது குழந்தையைக் கடித்த நண்டை பழிவாங்கும் நோக்கில் அதை உயிருடன் கடித்துச் சாப்பிட்டதால் அவருக்கு உடல் நலப்பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் குணமடைந்த சம்பவம் நடந்துள்ளது.
கிழக்கு சீனாவில் உள்ள ஜெஜியாங் பகுதியைச்சேர்ந்தவர் லூ. இவரது மகனை நண்டு ஒன்று கடித்துள்ளது. இதனால் அதைப் பழிவாங்கும் நோக்கத்தில் லூ உயிருடன் கடித்துச் சாப்பிட்டுள்ளார்.
பின்னர் இந்த சம்பவம் நடந்த இரண்டு மாதங்கள் கழித்து அவருக்கு மார்பு, பயிறு, கல்லீரல் போன்ற உறுப்புகளில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு ஏன் இப்படி ஆனது என்று முதலில் தெரியவில்லை. பின்னர் நடந்த வற்றை அவரிடம் கேட்டுத் தெரிந்த பிறகே ஒவ்வாமையால் இதுபோன்ற உடல் நலப்பிரச்சனை ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
தற்போது லூ முழுமையாகக் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் தொடர்ந்து பரிசோதனைக்கு வரவேண்டும் என மருத்துவர்கள் அவரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
Also Read
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!