உலகம்
Google நிறுவனத்திற்கு ரூ.1,337 கோடி அபராதம் விதித்த இந்திய தொழில் போட்டி ஆணையம்.. காரணம் என்ன?
ஆண்ட்ராய்டு செல்போன்களில் உள்ள கூகுள் ஆப்பை பலர் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான தகவல்களை அதில் தேடி பார்த்துக் கொள்கின்றனர். இந்நிலையில் ஆண்ட்ராய்டு செல்போன்களில் முதன்மை பெறும் நோக்கத்தில் கூகுள் நிறுவனம் முறையற்ற வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து 2019ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக இந்திய தொழில் போட்டி ஆணையம் விசாரணை நடத்தியது.
இதில், ஆண்ட்ராய்டு நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் இரண்டு முறைகேடான ஒப்பந்தங்கள் செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் விற்பனை சந்தையில் முதன்மை பெறுவதற்காகத் தவறான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
இதையடுத்து கூகுள் நிறுவனத்திற்கு ரூ.1,337.76 கோடி அபராதம் விதிக்கப்படுவதாக இந்திய தொழில் போட்டி ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த முறையற்ற நடவடிக்கையை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூகுள் நிறுவனத்திற்கு இந்திய தொழில் போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?
-
VBGRAMG சட்டம் ஒழிக! : ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
-
“பாசிஸ்ட்டுகளின் வஞ்சக சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு : பா.ஜ.கவின் ஆணவத்துக்கு அடி கொடுத்த நீதிமன்றம் - முரசொலி!