உலகம்
66 குழந்தைகள் பலி.. இந்தியாவில் தயாரான இருமல், சளி மருந்திற்கு WHO தடை: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!
ஆப்ரிக்கா நாடான காம்பியாவில் கடந்த ஜூலை மாதம் அடுத்தடுத்து 66 குழந்தைகள் சிறுநீகர பாதிப்பால் உயிரிழந்துள்ளன. இது குறித்து விசாரணை செய்தபோது ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த Maiden Pharmaceuticals Limited தயாரித்த இருமல் மருந்தை சாப்பிட்டது தெரியவந்துள்ளது.இது குறித்து விரிவான விசாரணை நடத்தவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் Maiden Pharmaceuticals Limited தயாரித்த 4 இருமல் மற்றும் சளி மருந்தைப் பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்துக் கூறிய WHO இயக்குநர் ஜெனரல் டேட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், "டை எத்திலீன் கிளைக்கால் அதிக அளவில் கலந்த மருந்துகளை எடுத்துக்கொண்டால் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, தலைவலி, சிறுநீரக பாதிப்பு, மனநிலை பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படும்,.
எனவே குரோம் மெத்தஸைன், பேபி கார்ப் சிரப் உள்ளிட்ட 4 மருந்துகளைக் குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் ஆபத்தானது என தெரிவித்துள்ளார். மேலும் வேறு எந்த நாடுகளில் எல்லாம் இந்த மருந்து விற்பனையில் உள்ளது என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் WHO கோரிக்கை விடுத்துள்ளது.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!