உலகம்

5 வருடத்துக்கு முன் தொலைத்த மூக்குத்தி.. நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆச்சரியம் !

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜோயி லிகின்ஸ் (வயது 35). இவருக்கு சமீப காலமாக மூச்சி விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பின்னர் திடீரென ஒருநாள் மிக அதிக வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையை அணுகியுள்ளார்.

அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், முதலில் அவருக்கு நிமோனியா இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்துள்ளனர். பின்னர் எக்ஸ்-ரே எடுக்கலாம் என முடிவு செய்த மருத்துவர்கள் அதன் முடிவை பார்த்தபோது அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவரின் நுரையீரலில் வளைவாக ஏதோ ஒரு பொருள் இருந்துள்ளது. பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அந்த பொருள் அகற்றப்பட்டபோது, அது மூக்கு வளையம் (மூக்குத்தி) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஜோயி லிகின்ஸிடம் கேள்வி எழுப்பியபோது, 5 வருடத்துக்கு முன் தான் தொலைத்த மூக்கு வளையம் என்பதை கூறியுள்ளார்.

ஜோயி லிகின்ஸ் இரவு தூங்கும் போது முக்கில் போட்டு இருந்த வளையம் காணாமல் போயுள்ளது. முதலில் அதை தேடிய அவர் பின்னர் அதனை அப்படியே விட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது அந்த வளையம் வாய்வழியாக அவரின் உடலில் சென்றுள்ளது. வளையம் அவரின் நுரையீரலைக் கிழிக்காமல் வெளிப்புறமாக இருந்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Also Read: Iicence இல்லை,LLR இல்லை.. பிரேக்குக்கு பதில் க்ளெட்சை மிதித்த பெண்ணால் 19 வயது இளைஞருக்கு நேர்ந்த சோகம் !