உலகம்

மேலெழுந்த கோர பற்கள், கழுத்தை சுற்றி கத்தி.. ஐரோப்பாவில் கண்டறியப்பட்ட ரத்தக்காட்டேரியின் சடலம் !

வடக்கு போலந்தில் உள்ள பைட்கோஸ்கிஸ் என்ற நகருக்கு அருகில் டோரு நிக்கோலஸ் கோப்பர்நிகஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 17ம் நூற்றாண்டை சேர்ந்த கல்லறை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் அதின் உள்ளே பார்த்தபோது பெண்ணின் சடலம் ஒன்று இருந்துள்ளது. ஆனால், அதன் கழுத்தை துண்டிக்கும் வகையில் இருப்பு பொருள் ஒன்று இருந்துள்ளது. இதனால் ஆய்வாளர்கள் அதனை சோதித்து பார்த்தபோது, பெண்ணுக்கு முன் பற்கள் நீண்டுகொண்டிருந்தது தெரியவந்தது.

இதன்மூலம் அந்த பெண் ரத்தக்காட்டேரி எனப்படும் வாம்பயராக இருக்கலாம் என ஆராச்சியாளர்கள் கூறியுள்ளனர். மேலும் அந்த பெண் உயர்ரக துணி மூலம் சுற்றப்பட்டிருப்பதால் அவர் செல்வந்த குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் கூறினர்.

அந்த பெண்ணின் பல் பெரியதாக இருந்ததால் அவர் ரத்தக்காட்டேரி எனக் கருதிய ஊர் மக்கள் அந்த பெண்ணை கொலை செய்திருக்கலாம் எனவும், ஒருவேளை அவரை புதைத்தபின்னும் அவர் எழுந்தால் அவர் கழுத்தை அறுக்கும் வகையில் இருப்பு பொருள் கழுத்தை சுற்றி வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

16,17, நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில், குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ரத்தக்காட்டேரி பற்றிய கதைகள் மற்றும் மூடநம்பிக்கை அதிகம் பரவியிருந்தது. பல மக்கள் அதை உண்மை என்றே நம்பினர். இதனால் ரத்தக்காட்டேரி என சந்தேகிக்கப்பட்ட பொதுமக்கள் பலர் கொன்று குவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Also Read: 1.68 லட்சத்தை இழந்த அரசு ஊழியர்.. மின்கட்டண மெசேஜை ஓபன் செய்தவருக்கு நேர்ந்த சோகம் !