உலகம்

கட்டிப்பிடி வைத்தியத்தில் உடைந்த எலும்புகள்.. உடன் வேலை செய்யும் ஊழியர் மீது பெண் பகிரங்க புகார் !

சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த இளம்பெண் ஒருவர் கடந்த மே மாதம் சக அலுவலக நண்பர்களுடன் தேநீர் அருந்திக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் அந்த பெண்ணை இறுக அணைத்து கட்டி பிடித்துள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கு முதுகில் வலி ஏற்பட்டுள்ளது.

பின்னர் அவர் இயல்பாக இருந்த நிலையில், மாலை பணிமுடிந்து வீடு திரும்பியிருக்கிறார். ஆனால், இரவில் மீண்டும் வலி அதிகரிக்கவே வீட்டில் சிறு முதலுதவி எடுத்து அடுத்த நாள் விடுப்பு எடுத்து வீட்டில் இருந்துள்ளார். ஆனாலும் அவருக்கு வலி குறையவில்லை.

இதனால், மருத்துவமனைக்கு சென்ற அவரை மருத்துவர்கள் ஸ்கேன் எடுக்க கூறியுள்ளனர். பின்னர் ஸ்கேன் அறிக்கையை பரிசோதித்த மருத்துவர்கள் இளம்பெண்ணின் மூன்று விலா எலும்புகள் உடைந்திருப்பதாக கூறியுள்ளனர். இதைக் கேட்ட அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் சில மாதங்கள் வேலைக்குச் செல்லாமல் அந்த பெண் இதற்கு சிகிச்சை எடுத்துள்ளார். சிகிச்சை முடிந்த நிலையில் வேலைக்கு திருப்பிய அவர், தன் எலும்பு முறிவுக்கு காரணமான நபரிடம் தனது மருத்துவ செலவுகளுக்கான தரவுகளைக் காட்டி பணம் கேட்டிருக்கிறார்.

ஆனால், அந்த நபர் தனது செயலை மறுக்கவே அந்த பெண் நீதிமன்றத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், " அந்தப் பெண் வேறு எங்கும் எலும்பை உடைத்துக்கொண்டதற்கான ஆதாரம் இல்லை. எனவே, இளம்பெண்ணை கட்டி பிடித்து அவர் எலும்புகள் உடைவதற்கு காரணமாக இருந்த இளைஞர் 10,000 யுவான் அந்தப் பெண்ணுக்கு வழங்கவேண்டும்" என உத்தரவிட்டது.

Also Read: 8 மாதமாக செயல்பட்ட போலி காவல்நிலையம்.. உண்மையான போலிஸ் என நம்பிய ஊழியர்கள்.. விசாரணையில் அதிர்ச்சி !