உலகம்

திருமணத்துக்கு வராத நண்பர்கள்.. விரக்தியில் அவசர முடிவெடுத்த பெண்.. நடந்தது என்ன ?

சீனாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு திருமணம் முடிவானதால் தனது திருமணத்துக்கு உடன் வேலை செய்யும் 70 பேரையும் அழைத்து அவர்களுக்கு அழைப்பிதழும் கொடுத்துள்ளார்.

அழைப்பிதழ் கொடுக்கும்போது அவரோடு வேலைசெய்தவர்கள் நிச்சயம் திருமணத்துக்கு வருவதாக உறுதி அளித்துள்ளனர். இதனால் தனது திருமணத்துக்கு உடன் வேலைசெய்பவர்கள் வருவார்கள் என அவர்களுக்கு உணவும் ஏற்பாடு செய்துள்ளார்.

ஆனால்,அவர் திருமண நிகழ்ச்சிக்கு அவரோடு வேலை செய்யும் ஒரே ஒரு நபர் மட்டுமே வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அவர் கணவரும் அவரை கிண்டல் செய்துள்ளார், இது தவிர அலுவலக நண்பர்கள்களுக்கு ஆர்டர் செய்த உணவுகளும் வீணாகியுள்ளது.

இதனால் தனது அலுவலக நண்பர்கள் மேல் கடும் ஆத்திரத்தில் இருந்த அவர், அந்த அலுவலகத்தில் இனி பணிபுரியக்கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளார். அடுத்த நாளே ராஜினாமா கடிதத்தோடு அலுவலகம் சென்ற அவர், உயரதிகாரியிடம் அந்தக் கடிதத்தை கொடுத்து இனி இந்த நிறுவனத்தில் பணிபுரிய மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை அந்த அலுவலகத்தில் வேலைசெய்யும் ஒருவர் சமூகவலைத்தளங்களில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது. பலரும் அந்த அலுவலகத்தில் வேலை செய்பவர்களை விமர்சித்து வருகின்றனர்.

Also Read: “டேய் மச்சா Party வைடா..” - party வைக்க மறுத்த நண்பனை சரமாரியாக தாக்கிய சக நண்பர்கள் !