உலகம்
11 லட்சம் பேர் வாழும் மாவட்டத்தில் 4 பேருக்காக ஊரடங்கு போட்ட சீனா.. என்ன காரணம்?
சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இன்னும் இந்த தொற்றிலிருந்து மீள முடியாமல், அதற்கான வழிகளை உலகம் தேடி வருகிறது. தற்போதைக்கு கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் விதமாகத் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், கொரோனா தொற்று டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான், என அடுத்தடுத்து உருமாறி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகள் தயார் நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களைப் பாதுகாத்து வருகின்றன.
இந்நிலையில் சீனாவில் உள்ள ஒரு மாவட்டத்தில் இருக்கும் மக்கள் தொகையில் 4 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
சீனாவில் 'ஜீரோ கோவிட்' என்ற திட்டத்தின் படி அதிகமாக மக்கள் இருக்கக் கூடிய பகுதிகளில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் ஜியாங்சியா மாவட்டத்தில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் மட்டும் 970,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறிகள் இல்லை என தெரியவந்துள்ளது.
இதையடுத்து இந்த மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வீட்டை விட்டு பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என கடும் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்தில் உள்ள மக்கள் எண்ணிக்கையில் 4 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இல்லை என்பது உலக நாடுகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
Also Read
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!
-
“சொத்துவரி உயர்வு.. சென்னை மக்கள் தலையில் பேரிடி” : முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்!