உலகம்
சீனாவின் சக்திமான்.. ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை CATCH பிடித்த நபர்.. வைரல் வீடியோ!
சீனாவின் சிஜியாங் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் அருகே 'ஷென் டாங்க்' என்ற நபர் தனது காரை பார்க்கிங் செய்து விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஐந்தாவது மாடியில் இருந்து குழந்தை ஒன்று தவறி விழுந்துள்ளது.
குழந்தை விழும் சத்தம் ஷென் டாங்க்க்கு கேட்ட நிலையில், உடனடியாக சுதாரித்த அவர் அருகே ஒடிச் சென்று மாடியிலிருந்து விழுந்த குழந்தையை கையில் பிடித்துள்ளார். பின்னர் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையிலும் அனுமதித்துள்ளார்.
அங்கு குழந்தைக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்பது தெரியவந்தது. இந்த நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சீனா நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லிஜியான் சஹாவோ ட்விட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், இந்த நபரை ஹீரோ என பாராட்டியுள்ளார்.
இது குறித்து குழந்தையை காப்பாற்றிய ஷென் டாங்க் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ஐந்தாவது மாடியில் இருந்து முதல் தளத்தில் உள்ள கூரையில் பத்திரமாக விழுந்தது. அங்கிருந்து குழந்தை கீழே உருண்டு விழும் என கணித்த நான் அதை கவனித்து கையில் ஏந்தி பிடித்துக்கொண்டேன்" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!