உலகம்
முன்னாள் MP உட்பட 4 பேரை தூக்கிலிட்ட மியான்மர் ராணுவம்.. உலகநாடுகள் அதிர்ச்சி!
மியான்மரின் என்.எல்.டி கட்சியின் தலைவராக இருப்பவர் ஆங் சான் சூகி. இவர் கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தார். ஆனால், தேர்தலில் மோசடி நடந்துள்ளது எனக் கூறி ஆங் சான் சூகியின் ஆட்சியை ராணுவம் கவிழ்த்தது.
இதையடுத்து ராணுவத்தின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ராணுவ ஆட்சியை எதிர்த்து ஆங் சான் சூகி போராட்டம் நடத்தினார். அப்போது இவர் உட்படப் பலரை ராணுவம் வீட்டுக் காவலில் அடைத்து வைத்துள்ளது.
இந்நிலையில், மியான்மர் ராணுவம் முன்னாள் எம்.பி உட்பட 4 பேருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி சமூக செயற்பாட்டாளர் கோ ஜிம்மி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபியோ ஜெயா தாவ் உட்பட 4 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மியான்மர் ராணுவம் இது குறித்து அவரது உறவினர்களுக்குக் கூட தெரிவிக்காமல் 4 பேரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியுள்ளது. மியான்மர் ராணுவத்தின் இந்த செயலுக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும் ராணுவத்தின் இந்த நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மீண்டும் மியான்மரில் கொடூரமான சட்டங்களை ராணுவ ஆட்சியில் அமல்படுத்தப்படுமோ என அந்நாட்டு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!