உலகம்
"ஏ.சி-யில் உட்கார்ந்து இலவசமா படம் பாக்கலாம்.." - பம்பர் offer கொடுத்த தியேட்டர்.. ஆனா ஒரு கண்டிஷன்..
சமீப காலமாக பருவநிலை மாற்றம் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக குளிர் பிரதேசங்களாக அறியப்படும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது கடும் வெப்ப அலை வீசி வருகிறது. அதன்படி இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் 40 முதல் 45 டிகிரி வரை வெப்பம் பதிவாவதால் அங்குள்ள மக்கள் கடும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.
வெயிலின் தாக்கம் தாங்க முடியாத மக்களுக்கு பயனுறும் வகையில் அங்கு இயங்கி வரும் மால்கள் தங்கள் நேரத்தை கூட்டியுள்ளது. மேலும் நீச்சல் குளங்களில் குளிக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு டிஸ்கவுன்ட்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த வெப்பத்திருக்காக தாங்களும் தங்கள் பங்குக்கு மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்த ஒரு திரையரங்கம் பொதுமக்களுக்கு இலவசமாக திரைப்படத்தை காட்சியளிக்க முடிவு செய்துள்ளது.
அதாவது பிரிட்டனில் உள்ள ஷோகேஸ் சினிமாஸ் என்ற திரையரங்கம், பொதுமக்களுக்கு ஒரு அறிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பிரிட்டன் மக்கள் அந்த திரையரங்கில் உள்ள ஏ.சி.யில் அமர்ந்து இலவசமாக திரைப்படத்தை பார்க்கலாம் என்று அறிவித்துள்ளது. ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையும் வைத்துள்ளது.
அந்த வகையில், திரையரங்கிற்கு வருபவர்கள் தலைமுடி சிவப்பு நிறத்தில் (Red Heads) இருந்தால் மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் அங்கு வருபவர்கள் பிரிட்டனை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் தலைமுடி சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.
இந்த சலுகையை அறிவித்தவுடன் திரையரங்கில் கூட்டம் அலைமோதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Also Read
-
முன்பதிவு பெட்டியில் உரிய டிக்கெட் இல்லாமல் ஏறினால் இனி நடவடிக்கை - தெற்கு ரயில்வே உத்தரவு !
-
🔴LIVE | கரூர் துயரம் : “விஜய் தாமதமாக வந்ததே நெரிசலுக்கு காரணம்..” - பேரவையில் முதலமைச்சர் விளக்கம்!
-
“அனைத்தையும் விட மக்களின் உயிரே முக்கியம்; மக்களின் உயிர் விலைமதிப்பற்றது”: பேரவையில் முதலமைச்சர் பேச்சு!
-
"சி.பி.ஐ RSS-BJP-ன் கைப்பாவை என்று சொன்ன விஜய் இன்று அதன் கைப்பாகையாகிவிட்டார்" - முரசொலி விமர்சனம் !
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!