உலகம்
கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவரால் நேர்ந்த கொடூரம்.. மயக்க மருந்துக் கொடுத்து பாலியல் வன்கொடுமை !
பிரேசில் நாட்டை சேர்ந்தவர் பெஜேரா (32). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரிடம் அனைத்து நோயாளிகளும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கர்ப்பிணி பெண் ஒருவரும் இவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு, அந்த பெண் வழக்கமான பரிசோதனைக்கு இந்த மருத்துவரை மீண்டும் அணுகியுள்ளார். அப்போது அவருக்கு மயக்க மருந்து கொடுத்து அந்த பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார் மருத்துவர் பெஜேரா.
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள், அவரது அறையில் இருக்கும் இரகசிய கேமராவில் பதிவாகியிருந்தது. இதனை பார்த்த மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர் பெஜேரா மீது காவல்துறையில் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் விசாரிக்கையில், அவர் இதுவரை சிகிச்சைக்கு வந்த 5 பெண்களிடம் இது போன்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள சம்பவம் தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் மருத்துவரே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?
-
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் - நகர் ஊரமைப்பு இயக்ககம்: பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
”நெல் போக்குவரத்து ஒப்பந்த விதிகளின்படி முறையாகச் செய்யப்பட்டுள்ளது” : சக்கரபாணி அறிக்கை!
-
ரூ.1,248.24 கோடியில் 10 சாலைகள், 2 மேம்பாலங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!