உலகம்
மனைவியை பானையில் போட்டு வேக வைத்த கணவன்.. குழந்தைகள் முன்பு நடந்த கொடூரம்.. பின்னணி என்ன ?
பாகிஸ்தானில் உள்ள கராச்சி பகுதியில் வசித்து வருபவர் ஆஷிக். இவருக்கு திருமணமாகி நர்கீஸ் என்ற மனைவியும், 6 குழந்தைகளும் உள்ளனர். இவர் அந்த பகுதியில் 9 மாதங்களாக மூடப்பட்ட தனியார் பள்ளி ஒன்றில் காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆஷிக், தனது மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். இந்த சண்டையில், ஆத்திரமடைந்த ஆஷிக் தலையணையை கொண்டு தனது மனைவி நர்கீஸை கொலை செய்துள்ளார். மேலும் அந்த சடலத்தை தனது குழந்தைகள் கண்முன்னே, அந்த பள்ளியின் சமயலறையில் உள்ள ஒரு பானையில் போட்டு வேகவைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ந்து போன, குழந்தைகள் செய்வதறியாது திகைத்து நின்றுகொண்டிருக்கும்பொது, ஒரு குழந்தை மட்டும் காவல்துறைக்கு அழைப்பு விடுத்து சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருவதற்குள், ஆஷிக் தனது குழந்தைகளில் 3 பேரை அழைத்துக்கொண்டு தப்பி சென்று விட்டார்.
இதையடுத்து பானைக்குள் இருந்த நர்கீஸின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறிவுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவத்தை நேரில் பார்த்த குழந்தைகளிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சம்பவத்தன்று ஆஷிக்கும், அவரது மனைவி நர்கீஸும் சண்டையிட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஆஷிக், தனது மனைவியை கொலை செய்து பள்ளி சமையல் அறையில் இருந்த பானைக்குள் வைத்து வேகவைத்துள்ளார். நாங்கள் இங்கு வருவதற்குள் அவர் தப்பியோடிவிட்டார். தற்போது தலைமறைவாக இருக்கும் ஆஷிக்கை தீவிரமாக தேடி வருகிறோம்” என்றார்.
குழந்தைகள் கண்முன்னே மனைவியை கொன்று, பானைக்குள் அடைத்து வேகவைத்த கணவனின் செயல் அனைவருக்கும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!