உலகம்

துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் உயிரிழந்தார்! உலகத் தலைவர்கள் இரங்கல்!

ஜப்பான் வரலாற்றில் அதிகமுறை பிரதமராக இருந்தவர் என்ற பெயரை பெற்றவர் ஷின்சோ அபே. இவருக்கு இந்திய அரசு பத்ம விபூஷன் விருதை வழங்கி கெளரவித்துள்ளது.

ஷின்சோ அபே வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ள ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இன்று காலைஜப்பானின் அபே நரா நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, இவரை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் அவர் மேல் குண்டு பாய்ந்தது. பின்னர் அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கடுமையான பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இந்த செய்தி உலக தலைவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரதமர் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: பெற்ற மகனை கடத்திச் சென்ற தந்தை.. இரண்டு மாநில போலிஸூக்கு அலர்ட் - விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்!