உலகம்

‘எனது கணவர் வாடகைக்கு..’ : குழந்தைகளின் நலனுக்காக மனைவி எடுத்த முடிவு - பிரிட்டனில் விநோதம் !

பிரிட்டனைச் சேர்ந்த லாரா யங் என்பவர், தனது குடும்ப வருமானத்தைப் பெருக்க நீண்ட நாட்களாக யோசித்து கொண்டிருந்தார். அப்போது தனது கணவனான ஜேம்ஸ்-ன் சில நடவடிக்கைகளை கண்டு அவருக்கு ஒரு திட்டம் தோன்றியது. அதன்படி 'Rent My Handy Husband' (எனது கைதேர்ந்த கணவர் விற்பனைக்கு) என்ற தலைப்பில் ஒரு இணையதளத்தை தொடங்கினார்.

அதாவது லாராவின் கணவர் ஜேம்ஸ், ஒரு கலை நிபுணர் ஆவார். அவர் வீட்டில் வெட்டியாக இருக்கும்போது, தேவை இல்லை என்று தூக்கி எறிந்த பயன்பெறாத பொருட்களை வைத்து கலைப்பொருட்களை தயாரித்து கொண்டிருந்திருக்கிறார். அண்மையில் கூட ஒரு டைனிங் டேபிள் ஒன்றை உருவிக்கியுள்ளார். இப்படி ஜேம்ஸ் எதாவது ஒரு பொருளை வைத்து, மற்ற பொருளை உருவாக்கி வந்திருக்கிறார்.

இப்படியாக அவர்களது வீட்டில் அலங்காரம் செய்வது, வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வது, தோட்டத்தை பராமரிப்பது உள்ளிட்ட எல்லாவற்றையும் ஜேம்ஸ் பார்த்து கொண்டு வந்துள்ளார். மேலும் ஜேம்ஸ் செய்த கலை பொருட்கள் அனைத்தும் கையால் செய்யப்பட்டவை என்பதால் அது மிகவும் தனித்துவம் வைத்துள்ளது.

எனவே தனது கணவரின் இந்த செயலை லாரா பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி அந்த இணையதளம் மூலமாக, தனது கணவரை மற்ற வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பியுள்ளார். இது ஒரு வகையில், நாம் சிறுவர்களாக இருக்கும்போது பக்கத்துக்கு வீட்டு பாட்டிக்காக கடைக்கு சென்று பொருள் வாங்கி கொடுத்தால், அந்த பாட்டி 1 அல்லது 2 ரூபாய் தருவார். இதுவும் அதே போல் தான். ஜேம்ஸ் ஒரு வேலைக்காரராக இல்லாமல் Freelancer ஆக வேலை பார்த்துக்கொடுத்து உடனே பணத்தையும் பெற்று விடுகிறார்.

லாரா - ஜேம்ஸ் மொத்தம் தம்பதிக்கு மூன்று குழந்தைகள். அதில் இரண்டு குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளது. முன்னதாக ஜேம்ஸ் ஒரு வேர்ஹவுஸில் வேலை செய்து வந்துள்ளார். தனது குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வேலையை விட்டார். அதனால் பண நெருக்கடி ஏற்பட, லாரா இது போன்ற ஒரு புதிய முயற்சியை கையிலெடுத்துள்ளார். லாரா தனது கணவரை பணிக்கு அனுப்ப 35 யூரோக்கள் நிர்ணயித்துள்ளார். இது இந்திய மதிப்பில் ரூ.3,365 ஆகும்.

Also Read: முதலிரவில் விசித்திர முறையில் மகளுக்கு பாலியல் கொடுமை.. : மருமகன் மீது மாமியார் கொடுத்த அதிர்ச்சி புகார்!