உலகம்

சிறுமிகளை ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமை.. பிரபல பாப் பாடகருக்கு 30 ஆண்டு சிறை - நீதிமன்றம் அதிரடி!

அமெரிக்காவை சேர்ந்தவர் ராபர்ட் கெல்லி. அவர் I Believe can Fly என்ற பாப் பாடல் மூலம் உலகம் அறியப்பட்டவராக மாறினார். இவரின் பல்வேறு பாப் இசைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.

இந்நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பாப் பாடகர் கெல்லி மீது பாலியல் குற்றச்சாட்டு புகார்கள் எழுந்தது. மேலும் பல ஆண்டுகளாக சிறுமிகளை வன்கொடுமை செய்து வருவதாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இதையடுத்து போலிஸார் கடந்த மாதம் கெல்லியை கைது செய்து சிறையில் அடைந்தனர். இவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் சிகாகோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணையில், பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது கெல்லி பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்தது நிரூபணமாகியுள்ளது. மேலும் இந்த வழக்கின் சாட்சிகளைப் பணம் கொடுத்து மிரட்டவும் கெல்லி முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து பாப் பாடகர் கெல்லிக்கு 30 ஆண்டு சிறை தண்டடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது பாப் பாடகர் கெல்லியின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ”அடுத்த Cool கேப்டன் ஹர்திக் பாண்டியா”.. இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஓபன் டாக்!