உலகம்
சாண்ட்விச்சில் மயோனிஸ் அதிகமாக போட்ட ஊழியர்.. கோபத்தில் துப்பாக்கியை எடுத்து சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்!
வெளிநாடுகளில் அதிகம் விரும்பப்படும் உணவுகள் என்றால் அது பர்கர், சாண்ட்விச்,பீசா போன்ற உணவுகள்தான். அதுவும் மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலான வேளைகளில் பொதுமக்கள் உணவகங்களுக்கு சென்று அங்கு பர்கர், சாண்ட்விச்,பீசா போன்றவற்றை சாப்பிடுவதையே விரும்புவார்கள்.
இந்த நிலையில் அதேபோன்று உணவகத்துக்கு சென்று சாண்ட்விச் வாங்கிய ஒருவர், அதில் மாயோனிஸ் அதிகம் சேர்த்ததாக கூறி உணவு ஊழியரை சுட்டுக்கொன்ற சம்பவம் நடந்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த அட்லாண்டா பகுதியில் ஒரு உணவகம் செயல்பட்டு வருகிறது. அங்கு வந்த நபர் ஒருவர் சாண்ட்விச்சை ஆர்டர் செய்துள்ளார். அதன்படி ஊழியர்களும் அவருக்கு சாண்ட்விச் வழங்கியுள்ளனர். அப்போது அதில் மாயோனிஸ் அதிகமாக இருந்துள்ளது.
இது குறித்து வாடிக்கையாளர் அங்கிருந்த இரண்டு உணவக ஊழியர்களிடம் வாங்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் இரண்டு ஊழியர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இதில் இரண்டு ஊழியர்கள் மீதும் குண்டு பாய்ந்த நிலையில், அதில் 26 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பது அடிப்படை உரிமை என நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!
-
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் : திமுக MP ராஜேஷ்குமார் வலியுறுத்தல்!
-
”அனல் மின் நிலையங்களுக்கு உரிய நிலக்கரி ஒதுக்கீடு வேண்டும்” : தமிழச்சி தங்கபாண்டியன் MP வலியுறுத்தல்!
-
“அரசமைப்பு திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல; சர்வாதிகாரத்தின் தொடக்கம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதி” : நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி அ.மணி கோரிக்கை!