உலகம்
பைக்கில் சென்ற பெண்ணின் தலையில் விழுந்த தேங்காய்.. இணையத்தில் வலம்வரும் அதிர்ச்சி வீடியோ!
மலேசியாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த தென்னைமரத்தில் இருந்து பெரிய தேங்காய் ஒன்று விழுந்துள்ளது. அந்த தேங்காய் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த பெண்ணின் தலையில் விழுந்துள்ளது.
இதில் படுகாயமடைத்த அந்த பெண் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். நல்வாய்ப்பாக அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்படவில்லை. உடனடியாக அங்கிருந்த சிலர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த நிகழ்வுகள் அந்த இருசக்கர வாகனத்தின் பின்னர் வந்த வாகனத்தில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர் சமூக வலைத்தளங்களிலும் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
இந்த விடீயோவை தனது பகிர்ந்த மலேசிய அமைச்சர் அஸ்ருல் மகாதீர் பின் அஜிஸும், இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க நெடுஞ்சாலையோரம் வரிசையாக நிற்கும் தென்னை மரங்களை அகற்றக்கோரி அரசிடம் மனு அளித்துள்ளார்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த பெண்ணின் மகள் பேஸ்புக்கில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், தனது தாய் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக கூறியுள்ளார். மேலும் அவர் உடல்நலம் குறித்து அவ்வப்போது தெரிவிப்பேன் எனவும் கூறியுள்ளார்.
Also Read
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!