உலகம்
ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம் - 255 பேர் பலி: சுக்குநூறான வீடுகள்!
ஆப்கானிஸ்தானின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பக்திகா மாகாணத்தில் உள்ள கோஷ்ஸ் என்னும் நகரத்தில் இருந்து 44 கி.மீ தொலைவில் பூமிக்கு அடியில் 51கி.மீ ஆழத்தில் 6.1 என்ற ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுகத்தில் உயிரிழப்புகள் குறித்து முதலில் தகவல் ஏதும் இல்லாத நிலையில் சமீபத்தில் வெளியான தகவலின்படி சுமார் 250 பேர் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டதாகவும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தில் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஆப்கானிஸ்தானை தாண்டி இந்தியா, பாகிஸ்தான், எல்லைகளுக்குள் சுமார் 500 தூரத்துக்கு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கூறியுள்ள தாலிபான் நிர்வாகத்தில் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் முகமது நசிம் ஹக்கானி “ பெரும்பாலான உயிரிழப்புகள் பக்திகா மாகாணத்தில் நடந்துள்ளது. இந்த பக்திகா மாகாணத்தில் 100 பேர் வரை உயிரிழந்திருக்கலாம், 250பேர் காயமடைந்திருக்கலாம். கிழக்கு மாகாணங்களான நான்கார்ஹார், கோஸ்ட் ஆகியபகுதிகளிலும் உயிரிழப்பு நடந்துள்ளது” எனத் தெரிவித்தார்
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!