உலகம்
ஆண்களை விட பெண்களுக்கு குறைவான ஊதியம்.. அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் Google: பின்னணி என்ன?
கூகுள் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு இடையே பாகுபாடு காட்டப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் இது உண்மை என்று ஒரு சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளது.
கலிஃபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் கடந்த 2013ம் ஆண்டு 15,500 பெண் ஊழியர்களுக்கு ஆண்களை விட குறைவான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்களும், பெண்களும் ஒரே பதவியில் இருந்தபோதும் கூட இந்த ஊதியப் பாகுபாடு இருந்துள்ளது.
இது குறித்து பெண் ஊழியர்கள் சிலர் நிர்வாகத்திடம் முறையிட்டும், உரியப் பதில் கிடைக்கவில்லை. இதனால் வேலையை விட்டுச் சென்ற முன்னாள் ஊழியர்கள் சிலர் 2017ம் ஆண்ட கூகுள் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை ஐந்து வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், ஊதிய பாகுபாடு காட்டப்பட்ட அனைத்து பெண் ஊழியர்களுக்கும் 118 மில்லியன் டாலர் (இந்திய மதிப்புப்படி ரூ.920 கோடி) இழப்பீட்டை வழங்குவதாகக் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து கூகுள் நிறுவனம் "எங்கள் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் சமத்துவத்தை நாங்கள் உறுதியாக நம்புகிறோம், ஏறக்குறைய ஐந்து வருட வழக்குகளுக்குப் பிறகு, எந்தவொரு ஒப்புதலும் அல்லது கண்டுபிடிப்புகளும் இல்லாமல் இந்த விஷயத்தைத் தீர்ப்பது அனைவருக்கும் நல்லது என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டோம், மேலும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என தெரிவித்துள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!