உலகம்

“கணவன்-மனைவியாக இருந்தாலும்.. உணவகங்களில் ஆண்கள், பெண்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட தடை” : ஆப்கானில் அவலம்!

ஆப்கானிஸ்தானை சில மாதங்களுக்கு முன் தாலிபான்கள் கைப்பற்றினர். ஆப்கன் மீண்டும் தாலிபான்கள் வசம் சென்றுள்ளதால் அந்நாட்டில் வசிக்கும் பெண்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வருகின்றனர். பள்ளிகளில் மேல்நிலைப் படிப்புகளில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என தாலிபான்கள் அறிவித்தது உலகம் முழுவதும் பெண்ணிய செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாது, 72 கி.மீ துாரத்துக்கு மேற்பட்ட பயணத்தின்போது ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் அந்த ஆண், நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும். முழு உடலையும் மறைக்கும் ஆடைகளை அணிந்தால் மட்டுமே பெண்கள் பயணம் செய்ய முடியும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதை திடீரென தாலிபான் அரசு நிறுத்தியுள்ளது. பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதை திடீரென தாலிபான் அரசு நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், உணவகங்களில், ஆண்கள், பெண்கள் சேர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. கணவர்-மனைவியாக இருந்தாலும் தனித்தனியே அமர்ந்து சாப்பிட மட்டுமே அனுமதி உள்ளதாக கூறப்படுகிறது. ஆப்கனில் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் மாகாணத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

இவ்வாறு ஆப்கானிஸ்தானை பின்னோக்கி இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளை தாலிபான்கள் மேற்கொண்டு வருவதற்கு பெண்ணிய செயற்பாட்டாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: தாலிபான்கள் உத்தரவால் பெண்கள் கடும் அதிர்ச்சி... ஆப்கானிஸ்தானில் நடப்பது என்ன?