உலகம்

”எங்கள் வேலை என்னாகும்?”- பாரக் அகர்வாலிடம் ட்விட்டர் ஊழியர்கள் சரமாரி கேள்வி!

பாகிஸ்தானில் 2 குழந்தைகளுக்கு போலியோ தொற்று!

பாகிஸ்தானில் 2 குழந்தைகளுக்கு போலியோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தைகளை அதிகம் தாக்கும் மிகவும் கொடூரமான தொற்று நோயான போலியோ நோய், உலகின் பெரும்பாலான நாடுகளில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டபோதிலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு சில நாடுகளில் இன்னமும் போலியோ பாதிப்பு உள்ளது நாட்டில் கிட்டத்தட்டட 15 மாதங்களாக போலியோ தொற்று இல்லாத நிலையில், தற்போது மீண்டும் தொற்று மெல்ல தலைகாட்டி இருப்பது போலியோ தடுப்பு அதிகாரிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ரம்ஜான் விடுமுறைக்காக, மக்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு பயணம் செய்யும்போது, வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 46.71 கோடி ஆக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 51.32 கோடியாக உயர்ந்துள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உருமாறி வரும் வகைகளால் கொரோனா பரவல் அதிகரித்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 98 லட்சத்து 59 ஆயிரத்து 602 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 46 கோடியே 71 லட்சத்து 11 ஆயிரத்து 806 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 60 ஆயிரத்து 388 பேர் உயிரிழந்து உள்ளனர்.

‘உக்ரைன் போர் நாயகனுக்கு’ உயரிய விருது!

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரின் முதல்நாளிலேயே ரஷ்யாவின் 10 விமானங்களை உக்ரைன் விமானி ஒருவர் சுட்டு வீழ்த்தினார். இதனால் உலகம் முழுவதும் பிரபலமான அந்த விமானி ‘Ghost of Kyiv' என அழைக்கப்பட்டார். கடந்த மார்ச் 13-ம் தேதி ரஷ்யபோர் விமானங்களை எதிர்கொள்வதற்காக மிக்-29 ரக விமானத்தில் தனி ஆளாக ஸ்டெபான் சென்றுள்ளார். இதில் ரஷ்யாவின் 40 ஜெட்விமானங்களை அவர் சுட்டு வீழ்த்திரஷ்யப் படைகளை திணற அடித்துள்ளார். இறுதியில் ஸ்டெபான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அவர் வீரமரணம் அடைந்தார். அவருக்கு உக்ரைன் ராணுவத்தின் மிக உயரிய விருதை அந்நாட்டு அரசு வழங்கி கவுரவித்துள்ளது. மேலும் உக்ரைன் கதாநாயகன் என்ற பட்டமும் ஸ்டெபானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எங்கள் வேலை என்னாகும்?- பாரக் அகர்வாலை சரமாரி கேள்வி!

ட்விட்டர் தலைமை நிர்வாகி பராக் அகர்வால் நடத்தியக் கூட்டத்தில் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து ஊழியர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊழியர்களின் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஒரு ஊழியர் "பங்குதாரர்களின் மதிப்பு மற்றும் நம்பிக்கைக் கடமையைப் பற்றி கேள்விப்பட்டு நான் சோர்வாக இருக்கிறேன். ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு பல ஊழியர்களுக்கு வேலை கிடைக்காமல் போகும் சாத்தியக்கூறுகள் பற்றி உங்கள் நேர்மையான எண்ணங்கள் என்ன" என ஒரு ட்விட்டர் ஊழியர் அகர்வாலிடம் கேட்டார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனம் ஊழியர்களின் எண்ணிக்கையை தினமும் கண்காணிக்கும் என்று அண்மையில் கூறினார். இதனால் சரியான செலவுக் குறைப்பு நடவடிக்கை இருக்கும் என்ற அச்சமும் ட்விட்டர் ஊழியர்களிடம் உள்ளது. ட்விட்டரில் ஆட்குறைப்பு இருக்குமா என்ற கருத்தும் டவிட்டர் நிறுவன ஊழியர்களிடம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘பதவியை விட்டு ஓடிவிடு’ மகிந்தா ராஜபக்சேவை நீக்க களமிறங்கிய புத்த துறவிகள்

இலங்கையில் மகிந்தா ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து விலகக் கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் புத்த மத துறவிகளும் களமிறங்கி உள்ளனர். புத்த மதத்தை தழுவிய நாடான இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் முக்கிய புத்த மத துறவிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த விஷயத்தில் புத்த மத துறவிகளும் இடைக்கால அரசு அமைக்க பரிந்துரைத்துள்ளனர். மகிந்தா ராஜபக்சே பதவி விலகவும், இடைக்கால அரசு அமைக்கவும் கோரி 1000க்கும் மேற்பட்ட புத்த மத துறவிகள் தலைநகர் கொழும்பில் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தினர். இது ஆளும் அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதில் பேசிய புத்த துறவிகள், ‘மகிந்த ராஜபக்சே பதவி விலகவில்லை என்றால், புத்த துறவி அமைப்புகள் சார்பாக அரசுக்கு எதிராக கட்டளை பிறப்பிக்கப்படும்,’ என்று அதிரடியாக அறிவித்துள்ளனர்.

Also Read: கால்வாயில் கவிழ்ந்த ரிக்சா.. 8 குழந்தைகள் பரிதாப பலி: எகிப்தில் நடந்த துயர சம்பவம்! #5IN1_WORLD