உலகம்

50 ஆண்டுகளுக்குப் பிறகு நூலகத்திற்கு திரும்பிய புத்தகம்.. அபராதம் எவ்வளவு தெரியுமா?

1) ஜப்பான் ரோபோ சாதனை!

ஜப்பானிய நிறுவனத்தின் ஐந்து பென்குயின் பொம்மைகளால் ஆன ரோபோ ஒன்று 1 நிமிடத்தில் 170 முறை ஸ்கிப்பிங் செய்து கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளது. காப்பியர்கள் மற்றும் அலுவலக உபகரணங்கள் செய்வதில் நிபுணத்துவம் பெற்ற RICOH நிறுவனத்தின் PENTA-X குழு “பென்குயின் - சான்’ பொம்மையை உருவாக்கியது. பின்னர் 5 பொம்மைளை சேர்த்து ரோபோ ஒன்றை உருவாக்கினர். மார்ச் மாதத்தில் கின்னஸ் உலக சாதனை நீதிபதி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இந்த ரோபோ 60 வினாடிகளில் 170 முறை ஸ்கிப் செய்து சாதனை செய்துள்ளது.

2) கொழும்புவில் ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டது!

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகப் போராடிய போராட்டக்காரர்கள் கொழும்புவில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டனர். சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான போராட்டக்காரர்கள் அங்கிருந்த தடுப்பு வேலிகளை அகற்றியும், போலீஸ் மீது கல் வீச்சிலும் ஈடுபட, போராட்டம் வன்முறையாக மாறியது. அங்கிருந்த போலீஸ் வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து கொழும்பு நகரில் வியாழன் இரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. தற்போது அங்கு பதற்றம் குறைந்துள்ளதால் ஊரடங்கு திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3) சிங்கப்பூர் - மலேஷியா எல்லைகள் மீண்டும் திறப்பு!

2 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் - மலேஷியா எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. “ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் எல்லைகள் திறக்கப்படுவதால் வாகனங்கள் அதிக அளவில் வந்து சேரும். எனவே மக்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். முடிந்தால் பயணிகள் johor-க்கு வருவதை தாமத படுதிக்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தப்படுள்ளது. இரண்டுஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டிருப்பதால் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக Dr.Wee தெரிவித்தார்.

4) அழிந்து வரும் இனமான ‘நீலக் கண்’ கருப்பு லெமூர் பிறந்துள்ளது!

புளோரிடாவில் உள்ள ஜாக்சன்வில்லி மிருகக்காட்சிசாலயில் நீலக்கண் உள்ள லெமூர் பிறந்துள்ளதாக அந்த மிருகக்காட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த லெமூர் உயிரினம் உலகில் மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. லெமூர் உயிரினம் மடகாஸ்கரில் மட்டுமே காணப்படுகின்றன. மேலும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் 2080-ஆம் ஆண்டில் இந்த உயிரினத்தின் மொத்த எண்ணிக்கையில் 80 சதவீதம் வரை குறையக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

5) 50 ஆண்டுகளுக்குப் பிறகு நூலகத்திற்கு திரும்பிய புத்தகம்!

ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு OVERDUE-ஆன புத்தகம் நூலகத்திற்குத் திரும்பியுள்ளதாக லண்டன் பல்கலைகழக கல்லூரியின் அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்தப் புத்தகம் லத்தீன் மொழி நாடக கதை QUEROLUS எனவும், அந்தப் புத்தகம் 1974-ல் கோடை விடுமுறையின்போது திருப்பித் தரவேண்டிய புத்தகம் என்று கூறியுள்ளனர். இன்றைய மதிப்பில் அந்தப் புத்தகத்திற்கான தாமதக் கட்டணம் ஒரு நாளைக்கு 13 செண்ட் வீதம் மொத்தம் 1,648.56 டாலராக இருந்திருக்கக்கூடும். இப்போது அந்தப் புத்தகம் பழமையான பொக்கிஷமாக மாறியுள்ளது.

Also Read: 3 நாள் பயணமாக இந்தியா வரும் நேபாள பிரதமர்.. உலக நாடுகளை எச்சரிக்கும் புதின்! #5IN1_WORLD