உலகம்
“தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை விற்கத் தயார்” : ரஷ்யா கொடுத்த கிரீன் சிக்னல் - முடிவெடுக்குமா இந்தியா ?
உக்ரைன் - ரஷ்யாவுடனான போர் தொடர்ந்து 22 நாளாக நடைபெற்று வருகிறது. உக்ரைனுடன் நடந்து வரும் போரால் நாளுக்கு நாள் உலக நாடுகள் பொருளாதார ரீதியாக பல்வேறு பாதிப்புகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.
ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை வித்து வருகின்றன. சமீபத்தில் கூட அமெரிக்கா, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் பொருள்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது. இதனால் கச்சா எண்ணெயை பொருமளவில் இருக்குமதி செய்யும் நாடுகள் என்ன மாதிரியான முடிவெடுப்பது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரஷ்யாவுடன் நீண்ட காலமாக நட்பு கொண்டிருக்கும் நாடு என்ற அடிப்படையில் இந்தியாவிற்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை விற்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. அதேவேளையில் ரஷ்யாவின் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா பரிசீலித்து வருவதாகவும் இந்திய பெட்ரோலித் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் பெட்ரோல் பொருட்களின் விலை அதிகரித்துள்ள சூழலில் இந்திய மக்களின் நலன் கருதி ரஷ்யாவுடன் இந்த ஒப்பந்தத்தை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.
Also Read
-
🔴LIVE : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026: வாக்கு எண்ணிக்கை - வெற்றி நிலவரம்!
-
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி: உதயநிதி ஸ்டாலின் வெற்றி!
-
🔴LIVE : 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026 : சூடுபிடிக்கும் தேர்தல் களம்..
-
“பிளவுவாதம், பிரிவினைவாதம், வகுப்புவாதம் மட்டும்தாம் மோடிக்கு தெரியும்!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
”வாக்கு எண்ணும் மையங்களில் பாஜக சதித்திட்டம்.. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சொன்ன பகீர் தகவல்!”